சூரரைப் போற்று படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி.S.தாணு தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் வருகிற தீபாவளி வெளியீடாக ரிலீஸாகவுள்ளது சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம். இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் நவம்பர் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

நடிகர் சூர்யாவுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், மணிகண்டன், லிஜோமொள் ஜோஸ், ராஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்திற்கு S.R.கதிர் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படத்தின் டீசர்,ட்ரெய்லர் மற்றும் பவர் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக ஜெய்பீம் படத்தின் 2-வது பாடலாக “தல கோதும்” பாடல் நாளை (அக்டோபர் 25-ஆம் தேதி) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

The next single #ThalaKodhum from #JaiBhim is releasing tomorrow @ 5️⃣ PM

Stay Tuned!

🎶 @RSeanRoldan
🎤 @pradeep_1123
✍️ @Dir_Rajumurugan

Watch #JaiBhimOnPrime, Nov. 2. @PrimeVideoIN@Suriya_offl #Jyotika @tjgnan @prakashraaj @rajsekarpandian @SonyMusicSouth pic.twitter.com/eU53vCCMZ5

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) October 24, 2021