தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்துள்ள இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து இயக்குனர் மதி மாறன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும் செல்ஃபி, இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் பேச்சுலர் மற்றும் இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் காதலிக்க யாருமில்லை ஆகிய திரைப்படங்களும் ஜீவி நடிப்பில் தயாராகி வருகின்றன.

அடுத்ததாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் பிரகாஷ் குமார் நடித்த ஜெயில் திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. க்ரிக்கஸ் சினி க்ரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள ஜெயில் படத்தில் அபர்ணிதி, ராதிகா சரத்குமார், பிரபாகர், யோகி பாபு, ரோபோ சங்கர், பசங்க பாண்டி மற்றும் ரவி மரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் ரேமண்ட் டெரிக் படத்தொகுப்பு செய்ய, ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் ஜெயில் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் ஜெயில் படத்திலிருந்து நாளை வெளிவரவுள்ள நகரோடி எனும் பாடலின் ப்ரோமோ வீடியோ இப்போது வெளியானது. ஜீவி உடன் இணைந்து தெருக்குரல் அறிவு மற்றும் அனன்யா பட் இணைந்து பாடியுள்ள நகரோடி பாடலின் ப்ரோமோ வீடியோ இதோ...