தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.

சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்து விட்டன.கொரோனா தாக்கம் காரணமாக சில தொடர்களில் நட்சத்திரங்கள் மாற்றப்பட்டனர்.சில தொடர்கள் எந்த காரணமுமின்றி கைவிடப்பட்டன.சில தொடர்கள் நட்சத்திரங்கள் பங்கேற்க முடியாததால் கைவிடப்பட்டன.

பல தொடர்கள் முடிக்கப்பட்டாலும் ரசிகர்கள் மனதை கவரும் படி புதிய சீரியல்களை சன் டிவி நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது.புதிதாக ஒளிபரப்பட்ட தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று TRP-யிலும் சாதனை படைத்து வருகின்றன.சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று சந்திரலேகா.கடந்த 2014 முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

ஸ்வேதா இந்த தொடரின் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் இந்த தொடர் இன்றுடன் 2000 எபிசோடுகளை கடந்துள்ளது.மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ள இந்த தொடருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Sandhya Jagarlamudi (@sandhyajagarlamudi)