சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக 2020 பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இயக்கத்தில் தயாராகி வந்த அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா,சதிஷ்,சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தடைபட்டது.பின்னர் முக்கால்வாசி ஷூட்டிங் முடிக்கப்பட்டு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் முதல் பாடல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது ரஜினிக்காக எஸ்பிபி பாடிய கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

#AnnaattheFirstSingle sung by the legendary Padma Vibhushan Thiru #SPBalasubrahmanyam is releasing on October 4th at 6 PM ! @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @Viveka_Lyrics @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #Annaatthe pic.twitter.com/GwMnuBGiqQ

— Sun Pictures (@sunpictures) October 1, 2021