தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அசத்தி வந்தவர் பிரபாஸ்.பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ,இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தின.அடுத்ததாக இவர் நடித்த சாஹோ படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தில் நடித்துள்ளார்.பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள்ளார்,இந்த படம் ஜனவரி 14ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது.இதனை தொடர்ந்து பிரபாஸ் சில முக்கிய படஙக்ளில் நடித்து வருகிறார்.

இந்தியாவின் முக்கிய சூப்பர்ஸ்டார்கள் மற்றும் முக்கிய இயக்குனர்களுடன் இணைந்து ப்ராஜெக்ட் கே,சலார்,ஆதிபுருஷ் என பல பன்மொழிகளில் தயாராகும் படங்களில் நடித்து அசத்தி வருகிறார் பிரபாஸ்.இதனை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் 25ஆவது படமான ஸ்பிரிட் படத்தினை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.

பிரபாஸ் நடித்துள்ள அதிபுருஷ் படத்தினை ஓம் ராவத் இயக்கியுள்ளார்.க்ரிதி சனோன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.சைப் அலி கான் இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது இந்த படத்தின் 100 நாட்கள் நடைபெற்று வந்த ஷூட்டிங் நிறைவுக்கு வந்துள்ளது என்று இயக்குனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Last day, last shot and tons of amazing memories but the journey is not over yet!

See you soon darling #Prabhas#Adipurush #AboutLastNight pic.twitter.com/rtB7KahopK

— Om Raut (@omraut) November 4, 2021