தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனவை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து தனது 65ஆவது படத்தில் நடித்து வந்தார் விஜய்.

இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.கொரோனாவால் இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.அப்போது ரசிகர் ஒருவர் தளபதி விஜய் குறித்து கேள்வி எழுப்ப அவர் மிகவும் அவர் மிகவும் அற்புதமான மனிதர் என தெரிவித்துள்ளார்,இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

One word is not enough..but….I’ll try…ummm… SWEETEST. #AskPoojaHegde https://t.co/qBDXfsO9pG

— Pooja Hegde (@hegdepooja) October 18, 2021