தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் Sarkaru Vaari Paata படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் .இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது,விரைவில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் முதலில் ஜனவரி 13ஆம் தேதி 2022-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது,ஏற்கனவே 3 பெரிய படங்கள் பொங்கலுக்கு வருவதால் இந்த படம் தற்போது ஏப்ரல் 1ஆம் தேதி 2022-ல் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

April 1st 2022!! 😊#HappyDiwali @KeerthyOfficial @ParasuramPetla @madhie1 @MusicThaman @MythriOfficial @GMBents @14ReelsPlus #SarkaruVaariPaata pic.twitter.com/fw83zwDC7T

— Mahesh Babu (@urstrulyMahesh) November 3, 2021