இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் பொம்மை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராகவும் நடிகராகவும் திகழும் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்களில் நடித்து வருகிறார். விஷாலுடன் இணைந்து வித்தியாசமான டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக தயாராகி இருக்கும் மார்க் ஆண்டனி, பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க உருவாகி வரும் கேம் சேஞ்சர் ஆகிய திரைப்படங்களில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து இறைவி படத்திற்கு பின் மீண்டும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்த SJ.சூர்யா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இந்த தீபாவளி வெளியிட ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் SJ.சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் தான் பொம்மை. தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மொழி மற்றும் அபியும் நானும் உட்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் SJ.சூர்யா & பிரியா பவானி சங்கர் இருவரும் மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பொம்மை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், அண்தோனி படத்தொகுப்பு செய்துள்ள பொம்மை திரைப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர் கார்க்கி எழுதியுள்ளார். டாக்டர் V.மருது பாண்டியன், டாக்டர் ஜாஸ்மின் சந்தோஷ், மற்றும் டாக்டர் தீபா.T.துரை ஆகியோரது தயாரிப்பில் ஏஞ்சல் ஸ்டுடியோ சார்பில் SJ.சூர்யா அவர்கள் வழங்கும் பொம்மை திரைப்படம் வரும் ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில், பொம்மை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றுள்ளது. இந்த இசை வெளியீட்டின் வீடியோவை படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் தொடக்கத்தில் பேசியிருக்கும் எஸ்.ஜே.சூர்யா அவர்கள், “இந்த இசை வெளியீட்டு விழாவை இன்னும் பெரிதாக நடத்தி இருக்க வேண்டும் ஆனால் நேரமின்மை காரணமாக எளிமையாக நடத்துகிறோம். இருப்பினும் இந்த இரண்டு செலிபிரிட்டிகள் (இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் & பிரதீப் ரங்கநாதன்) ஒத்துழைத்ததால் இந்த நிகழ்ச்சி இன்னும் பெரிதாகிவிட்டது." என குறிப்பிட்டு இருக்கிறார். பொம்மை திரைப்படத்தின் பாடல்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் வெளியிட இயக்குனர் பற்றி ரங்கநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் பொம்மை திரைப்படத்தின் பாடல்களை வெளியிடுவதில் தங்களுக்கு இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றனர். தொடர்ந்து பேசிய பொம்மை படத்தின் இயக்குனர் ராதா மோகன் மற்றும் இசையமேப்பாளர் யுவன் சங்கர் ராஜா பொம்மை திரைப்படம் குறித்து பேசி இருக்கின்றனர் அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.