‘கஸ்டடி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? - தளபதி 68 பட இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட கலகலப்பான வீடியோ உள்ளே..

கஸ்டடி ஒடிடி ரிலீஸ் குறித்து வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு - Venkat prabhu announced custody ott release | Galatta

தமிழ் சினிமாவில் அட்டகாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதனை விறுவிறுப்பான திரைகளத்தில் கொடுத்து ரசிகர்களை உற்சாகப் படுத்தும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகராகவும் பாடகாரகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்த வெங்கட் பிரபு சென்னை 28 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமனார். முதல் படத்திலே இளைஞர்கள் விருபத்தை கவர்ந்து தமிழ் சினிமாவில் கவனிக்க தக்க இயக்குனர்களில் ஒருவரானார் வெங்கட் பிரபு. பின்னர் தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் போன்ற பல   என்டர்டெய்னிங் திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார். இதில் அஜித் குமார் நடிப்பில் உருவான மங்காத்தா திரைப்படம் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார் இயக்குனர் வெங்கட் பிரபு. தற்போது இவர் தளபதி விஜய் அவர்களின் 68 வது திரைப்படமான ‘தளபதி 68’ திரைப்படத்தை இயக்கவுள்ளார். ஏஜி எஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முதலில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இயக்கி வெளியான படம் ‘கஸ்டடி’. தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா இப்படத்தில் நாயகனாக நடிக்க இவருடன் இணைந்து கிருத்தி ஷெட்டி, அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாசா சித்தூரி அவர்களின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் SR.கதிர் ஒளிப்பதிவு செய்ய வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

முழுக்க முழுக்க பக்கா ஆக்ஷன் திரைப்படமான கஸ்டடி ரசிகர்களின் ஆரவராமான வரவேற்பில் தமிழ், தெலுங்கில் கடந்த மே 12ம் தேதி வெளியானது.  திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. பெருமளவு வரவேற்பு கிடைக்காவிட்டாலும் இப்படத்திற்கு வெங்கட் பிரபு ரசிகரிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் எட்டிய நிலையில் அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கஸ்டடி திரைப்படத்தின் ஒடிடி ரிலிஸ் குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஜூன் 9 லிருந்து கஸ்டடி திரைப்படம் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வெங்கட் பிரபு வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Embark on an electrifying journey alongside Constable Siva as he fearlessly navigates a treacherous maze of corruption, deceit, and lies!#CustodyOnPrime, June 9 pic.twitter.com/HyRyGoWUXP

— venkat prabhu (@vp_offl) June 7, 2023

 

புது பவருடன் ஹிப் ஹாப் ஆதி செய்யும் சேட்டைகள்.. வீரன் படத்தில் இடம் பெற்ற முக்கிய காட்சியை வெளியிட்ட படக்குழு – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

புது பவருடன் ஹிப் ஹாப் ஆதி செய்யும் சேட்டைகள்.. வீரன் படத்தில் இடம் பெற்ற முக்கிய காட்சியை வெளியிட்ட படக்குழு – வைரல் வீடியோ உள்ளே..

ராம அவதாரத்தில் மிரட்டும் பிரபாஸ்.. எதிர்பார்ப்பை எகிரவைக்கும் ஆதிபுருஷ் படத்தின் இறுதி ட்ரைலர் – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

ராம அவதாரத்தில் மிரட்டும் பிரபாஸ்.. எதிர்பார்ப்பை எகிரவைக்கும் ஆதிபுருஷ் படத்தின் இறுதி ட்ரைலர் – வைரல் வீடியோ உள்ளே..

3 ஆண்டுகள் முடிந்தும் வைப் அடங்காத நிரா பாடலின் வீடியோவை வெளியிட்ட டக்கர் படக்குழு – உற்சாகத்தில் ரசிகர்கள் வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

3 ஆண்டுகள் முடிந்தும் வைப் அடங்காத நிரா பாடலின் வீடியோவை வெளியிட்ட டக்கர் படக்குழு – உற்சாகத்தில் ரசிகர்கள் வைரலாகும் Glimpse இதோ..