‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு டிக்கெட் விலை குறைப்பு..! இது தான் காரணம்..– வைரலாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..

டிக்கெட் விலையை குறைத்த தி கேரளா ஸ்டோரி படக்குழு வைரல் பதிவு இதோ - The kerala story movie tickets starting 99 rupees | Galatta

கடந்த மாதம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி நாடு முழுவதும் பேசுபொருளான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் திரையரங்குகளின் டிக்கெட் விலையை குறைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கிய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்து பெண்களை ஏமாற்றி மதம் மாற்ற செய்ய வைத்து தீவிரவாதிகளாக உருவாக்குவது போன்று கதையை கொண்டுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. பல தடைகளை தாண்டி திட்டமிட்ட தினத்தில் திரைப்படம் வெளியானது. வங்க தேச மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டது. தமிழ் நாட்டில் ஒரே நாளில் திரையரங்கத்தினரால் காட்சிகள் நீக்கப் பட்டது.

இந்நிலையில் இது குறித்து உச்சநீதிமன்றத்தை நாடிய படக்குழு தடையை தவிர்த்து வென்றது. பின் படக்குழு மேலும் இப்படத்தினை உலகளவில் திரையிட முடிவு செய்தது. அதன்படி உலகளவில் 37 நாடுகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெற்றிகராமாக ஓடியது. இதுவரை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஏறத்தாழ 250 கோடி வசூல் பெற்று கவனம் பெற்று வருகிறது. ஒரு மாதம் கடந்த தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியாவில் இன்னும் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தனி வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் படத்தின் டிக்கெட் விலையை தற்போது அதிரடியாக குறைத்துள்ளது படக்குழு. அந்த அறிவிப்பின் படி இனி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையரங்குளில் பார்க்க 99ரூ செலுத்தி பார்க்கலாம் என்று அறிவித்துள்ளது. இது குறித்து இப்படத்தின் நாயகி அடா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில்.,

“எங்களுக்கு கிடைத்த தகவலின் படி பலர் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை 2 லிருந்து 3 முறை பார்த்து வருகிறீர் என்று.. அதனால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி... தற்போது திரையரங்குகளில் தி கேராளா ஸ்டோரி திரைப்படத்தை 99ரூபாய் செலுத்தி பார்க்கலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார். இப்பதிவையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் அடா ஷர்மா பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

 

Since we got messages from soooo many of you saying you watched #TheKeralaStory the second and third time . Good news ! Tickets now available starting 99 rupees pic.twitter.com/sO35I6aWzj

— Adah Sharma (@adah_sharma) June 6, 2023

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் நடிகை அடா ஷர்மா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து யோகிதா பிகானி, சோனியா பலானி, சித்தி இத்தானி, விஜய் கிருஷ்ணா,தேவ தர்ஷினி, பிரனை பசுவாரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிரஷான்தனு முஹபத்ரா ஒளிப்பதிவு செய்ய விரேஷ் ஸ்ரீவல்சா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டுகள் முடிந்தும் வைப் அடங்காத நிரா பாடலின் வீடியோவை வெளியிட்ட டக்கர் படக்குழு – உற்சாகத்தில் ரசிகர்கள் வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

3 ஆண்டுகள் முடிந்தும் வைப் அடங்காத நிரா பாடலின் வீடியோவை வெளியிட்ட டக்கர் படக்குழு – உற்சாகத்தில் ரசிகர்கள் வைரலாகும் Glimpse இதோ..

இந்தியாவின் முதல் முறையாக.. டக்கர் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

இந்தியாவின் முதல் முறையாக.. டக்கர் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரல் வீடியோ உள்ளே..

உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகளை நட்ட நடிகர் சௌந்தரராஜா .. குவியும் பாராட்டுகள் – விவரம் உள்ளே..
சினிமா

உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகளை நட்ட நடிகர் சௌந்தரராஜா .. குவியும் பாராட்டுகள் – விவரம் உள்ளே..