இரண்டு நாட்கள் திரையரங்குகள் செயல்படாது..! போராட்டத்தில் ஈடுபட்ட உரிமையாளர்கள்.. – அதிர்ச்சியில் ரசிகர்கள்.. பின்னணி இதோ..

கேரளாவில் இரண்டு நாட்கள் திரையரங்குகள் மூடப்படுகிறது காரணம் இதோ - Kerala theatre strike for two days | Galatta

கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு ஒடிடி தளங்களின் வளர்ச்சி அதீத அளவு வளர்ந்து தற்போது பொழுதுபோக்கு துறையில் மிக முக்கியமான பங்கை வகித்து வருகிறது. ஆரம்பத்தில் மிகப்பெரிய அளவு வரவேற்பை அனைத்து தரப்பினராலும் பெற்று வந்த ஒடிடி. பின்  திரையரங்குகளில் வெற்றிகராமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படங்களை வெகு விரைவாக ஒடிடி தளத்திற்கு கொண்டு சேர்ப்பது குறித்து எதிர்ப்பு எழுந்தது. திரையரங்கிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கிட்டத்தட்ட பலரிடம் குறைந்து வருகிறது. வெகு சில படங்களே திரையரங்குகளை முழுமைப் படுத்துகின்றது.

இந்நிலையில் இந்திய சினிமாவில் ரசிகர்களை அவ்வப்போது ஆச்சர்யப் படுத்தி வியப்பில் ஆழ்த்தும் துறையாக இருந்து வருவது மலையாள திரையுலகம். இதில் சமீப காலமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் உற்சாகப் படுத்தும் வகையில் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக சமீபத்தில் கடந்த மே 5ம் தேதி வெளியான 2018 திரைப்படம் இந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

கடந்த 2018 ல் கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளம் பேரிடர் தொடர்பாக உருவான 2018 இப்படத்தில்  டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவு வரவேற்பை உலகளவில் பெற்று ரூ 160 கோடிக்கு மேல் வசூல் செய்து மலையாள திரையுலகில் புது சாதனையை படைத்து வருகிறது. அதே நேரத்தில் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான ‘பச்சுவும் அத்புத விளக்கும்’ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.  

இந்நிலையில் உலகளவில் கவனம் பெற்ற 2018 திரைப்படம் நேற்று சோனி லீவ் ஒடிடி தளத்தில் வெளியானது ‘பச்சுவும் அத்புத விளக்கும்’  திரைப்படமும் அமேசான் ப்ரைமமில் வெளியாகியுள்ளது. இந்த முடிவு திரையரங்க உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. திரையரங்குகள் இன்னும் நிரம்பி வழியும் இந்த இரண்டு படங்களை எப்படி இவ்வளவு விரைவாக ஒடிடியில் வெளியிடலாம் என்று திரையரங்குகள் கூட்டமைப்பு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். படக்குழுவின் இந்த வியாபார நோக்கில் எடுக்கும் முடிவை கண்டித்து கேரளா திரையரங்க உரிமையாளர் கூட்டமைப்பினர் இன்றும் (ஜூன் 7) நாளையும் (ஜூன் 8) ஆகிய தினங்களில் கேரளாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என்று அறிவித்தது.

இது குறித்து திரையரங்க கூட்டமைப்பின் தலைவர் கூறியது, “சமீபத்தில் வெளியான 2018, பச்சுவும் அத்புதவிளக்கும் திரைப்படங்கள் திரையரங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் முன்கூட்டியே  ஒடிடியில் வெளியிடுவது கண்டிக்க தக்கது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மட்டுமே ஓடிடியில் திரைப்படங்களை வெளியிட அனுமதி வழங்குமாறு அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.” என்றார் மேலும் தொடர்ந்து  ‘2018’ திரைப்படம் இன்னும் கொஞ்சம் காலம் காத்திருந்தால்  ரூ.200 கோடி வசூல் செய்த முதல் மலையாள படம் என்ற பெருமையை பெற்றிருக்கும்  அதற்குள் அதனை வெளியிட்டது வேதனை தருகிறது, திரையரங்குகளுக்கு வரவேண்டும் என்று நினைப்பவர் ஒடிடி ரிலீஸ் அறிந்து திரையரங்கிற்கு செல்வதை தவிர்க்கின்றனர். அதனால் இந்த இரண்டு நாள் திரையரங்குகள் நிறுத்தம் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.  தற்போது இந்த பிரச்சனை கேரளா மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அரசு சார்ந்த திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இன்று இயங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராம அவதாரத்தில் மிரட்டும் பிரபாஸ்.. எதிர்பார்ப்பை எகிரவைக்கும் ஆதிபுருஷ் படத்தின் இறுதி ட்ரைலர் – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

ராம அவதாரத்தில் மிரட்டும் பிரபாஸ்.. எதிர்பார்ப்பை எகிரவைக்கும் ஆதிபுருஷ் படத்தின் இறுதி ட்ரைலர் – வைரல் வீடியோ உள்ளே..

3 ஆண்டுகள் முடிந்தும் வைப் அடங்காத நிரா பாடலின் வீடியோவை வெளியிட்ட டக்கர் படக்குழு – உற்சாகத்தில் ரசிகர்கள் வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

3 ஆண்டுகள் முடிந்தும் வைப் அடங்காத நிரா பாடலின் வீடியோவை வெளியிட்ட டக்கர் படக்குழு – உற்சாகத்தில் ரசிகர்கள் வைரலாகும் Glimpse இதோ..

இந்தியாவின் முதல் முறையாக.. டக்கர் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

இந்தியாவின் முதல் முறையாக.. டக்கர் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரல் வீடியோ உள்ளே..