குறும்படங்கள் மூலம் பிரபலமாகி பின் பீட்சா திரைப்படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். முதல் படத்திலே யாரும் எதிர்பார்க்காத அளவு அட்டகாசமான திரைக்கதை கொண்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய கார்த்திக் சுப்பராஜ். பின் தொடர்ந்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி ஆகிய திரைப்படங்களை இயக்கி குறிப்பிடத்தக்க இயக்குனாராக வளர்ந்தார். தனது நான்காவது திரைப்படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கும் வாய்பை பெற்று உச்சத்தில் சென்றார் கார்த்திக் சுப்பராஜ். அதன்படி கடந்த 2019 ல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான பேட்ட திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. பின் தொடர்ந்து கார்த்திக் ஜகமே தந்திரம், மகான் ஆகிய திரைப்படங்களை இயக்கி முடித்தார். இதனிடையே இயக்குனராக மட்டுமல்லாமல் மிக முக்கிய திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் கவனம் பெற்றார். தற்போது கார்த்திக் சுப்பராஜ் சூப்பர் டீலக்ஸ் டபுள் எக்ஸ் திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ராம் சரணின் ‘கேம் செஞ்சர்ஸ்’ திரைப்படத்தில் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் கலந்து கொண்டு தனது திரைப்பயணம் குறித்தும் வருங்கால திரைப்படங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் லோகஷ் LCU போல் ஜிகர்தண்டா கதைகளும் இடம் பெறுமா என்ற கேள்விக்கு,
"ஜிகர்தண்டா என்பது ஒரு கிளை திரைப்படமாக இருக்க விரும்புகிறேன். ஒரு கலைதுறையும் ஒரு கிரைம் உலகமும் இணையும் கதை சாரம் தான் ஜிகர்தண்டா. அதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். இந்த மாதிரி கதை சாரத்தில் இருக்கும் திரைப்படம் எல்லாம் ஜிகர்தண்டா என்ற ஜானரில் வந்துவிடும்.
அந்த கதைக்கருவில் ஏகப்பட்ட கதைகள் பண்ணலாம். இப்போ அசால்ட் சேது வெச்சு முன்னாடி கதை என்று பண்ணாம.. இது போன்ற ஜானர் வகையில் செல்ல விரும்புகிறேன். உதாரணமாக படத்திற்குள் படம் எடுக்கும் கதை கொண்ட திரைப்படங்கள் எல்லாம் மெட்டா திரைப்படம் என்றழைக்கப்படும் . ஜிகர்தண்டாவும் மெட்டா திரைப்படம் தான். அந்த மாதிரி தான் இந்த டபுள் எக்செல் படமும் இருக்கும்." என்றார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் தனது திரைப்பயணம் குறித்தும் வருங்கால திரைப்படங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..