ராம அவதாரத்தில் மிரட்டும் பிரபாஸ்.. எதிர்பார்ப்பை எகிரவைக்கும் ஆதிபுருஷ் படத்தின் இறுதி ட்ரைலர் – வைரல் வீடியோ உள்ளே..

ஆதிபுருஷ் படத்தின் இறுதி டிரைலரை வெளியிட்ட படக்குழு வீடியோ உள்ளே - Prabhas Adipurush movie final trailer out now | Galatta

இந்தியா நாட்டு மக்களால் போற்றப்படும் இதிகாசமாக பல காலமாக திகழ்ந்து வரும் இராமாயணம் கதையை தழுவி இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் ராமராக நடிக்க சீதாவாக கீர்த்தி செனான் நடித்துள்ளார். மேலும் இராவணனாக சைப் அலிகான் நடித்துள்ளார். ரசிகர்களின் மிகப்பெரிய எதிப்பார்பின் மத்தியில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய , அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ளனர். Retrophiles  மற்றும் T Series தயாரிப்பில் உருவான இப்படம் வரும் ஜூன் மாதம் 16 ம் தேதி உலகமெங்கும் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம். மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.முன்னதாக இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது. இப்படத்தின் டிரைலர் குறைந்த நேரத்தில் 6 கோடிக்கும் மேல் பார்வையாளர்களை பெற்று கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள ஆதிபுருஷ் படத்தின் இரண்டாவது டிரைலரை படக்குழு நேற்று வெளியிட்டது. திருப்பதியில் ரசிகர்களின் மிகப்பெரிய திரளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதிபுருஷ் படத்தின் இறுதி ட்ரைலர் வெளியிடப்பட்டது. இதுவரை இந்திய சினிமாவில் இல்லாத அளவு பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் டிரைலரில் இல்லாத காட்சிகள் இதில் இடம் பெற்றது முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் பேக் டிரைலராக வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இராவணன் சீதையை கடத்தி செல்லும் காட்சி தொடங்கி இராவணன் மீது வானர படையுடன் போர் தொடுத்து பிரம்மாஸ்திரம் பயன்பாடுத்தும் காட்சி வரை விறுவிறுப்பாக இரண்டாவது டிரைலர் அமைந்துள்ளது. மேலும் இந்த டிரைலரின் சிறப்பு வாசகமாக “ஒவ்வொரு பாரத குடிமக்களின் ஆதிபுருஷ்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  

பிரபாஸ் தற்போது கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் வசூல் குவித்த பிளாக் பஸ்டர் கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும்  சலார் படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து தெலுங்கு இந்தியில் உருவாகி வரும் பான் இந்திய திரைப்படமான ‘புரோஜக்ட் கே’ படத்தில் நடித்து வருகிறார். Sci Fi கதைக் களத்தில் பக்கா ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகளை நட்ட நடிகர் சௌந்தரராஜா .. குவியும் பாராட்டுகள் – விவரம் உள்ளே..
சினிமா

உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகளை நட்ட நடிகர் சௌந்தரராஜா .. குவியும் பாராட்டுகள் – விவரம் உள்ளே..

தளபதி 68 டைட்டில் குறித்த அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

தளபதி 68 டைட்டில் குறித்த அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ உள்ளே..

 முற்றிலும் மாறுபட்ட க்ரைம் திரில்லரில் களம் இறங்கிய சுனைனா..-  ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான டிரைலர் இதோ..
சினிமா

முற்றிலும் மாறுபட்ட க்ரைம் திரில்லரில் களம் இறங்கிய சுனைனா..- ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான டிரைலர் இதோ..