“சில முறை மட்டுமே சந்திக்க முடியும்..” திருமண நாளில் ரகசியத்தை பகிர்ந்த பிரபல பாடகர் பென்னி தயாள் மனைவி.. – வைரலாகும் பதிவு உள்ளே...

திருமண வாழ்கை குறித்து ரகசியத்தை பகிர்ந்த பென்னி தயாள் மனைவி - Benny Dayal wife catherine Philip shares unknown secrets | Galatta

தமிழ் சினிமாவில் தன் தனித்துவமான குரல் வளத்தினால் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பின்னணி பாடகர் பென்னி தயாள்.  ஏ ஆர் ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பாபா’ படத்தில் இடம் பெற்ற மாயா மாயா பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பென்னி தயாள் குரலில் வெளியான பெரும்பாலான பாடல்கள் இன்றும் ரசிகர்கள் வைப் செய்யும் பாடல்களாகவே இருந்து வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, வங்காளம், மராத்தி, உருது ஆகிய மொழிகளிலும் பென்னி தயாள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.  

இவர் கடந்த 2016 ம் ஆண்டு நியூயார்க்கில் வசித்து வரும் கேத்ரின் பிலிப் என்ற பெண்ணை மணந்து கொண்டார். குவைத்தில் பிறந்து வளர்ந்த கேத்ரின் அமெரிக்காவில் பல்வேறு பேஷன் நிகழ்சிகளில் மாடலாக பங்கெடுத்துள்ளார். இவர்கள் தங்களது 7 வது ஆண்டு திருமண நாளை சமீபத்தில் கொண்டாடினர். இந்நிலையில் தங்கள் திருமண நாளில் யாரும் அறிந்திடாத மூன்று ரகசியங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய தருணங்களின் வீடியோ தொகுப்புடன் பகிர்ந்துள்ளார். அதில்,

“1. நான் என் பெயரை திருமணத்திற்கு பின்பும் மாற்றிக் கொள்ளவில்லை. காரணம் நாங்கள் இருவரும் வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள். அதனால் எங்கள் பாஸ்போர்ட் போன்ற முக்கியமான ஆவணங்கள் அனைத்திலும் மாற்றுவது கடினம். என்னுடைய உண்மையான பெயர் கேத்ரின் பிலிப் தான். ஆனால் சில பணிகளுக்கு கேத்ரின் தயாள் என்று வைத்துள்ளேன்.

2.  வீட்டின் நிதி நிர்வாகத்தையும் செலவீனங்களையும் நாந்தான் பார்த்துக் கொள்கிறேன். பென்னி அவர் வேலையில் பிஸியாக இருபதால் வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் இதர அத்யாவசிய பொருட்கள் வாங்குவதை நான்தான் செய்து கொள்கிறேன். இதுவே எங்கள் திருமண வாழ்கை சிறப்பாக செல்ல உதவுகிறது.

 

3. வேலை காரணமாக இருவரும் வெகு தொலைவில் இருக்க நேரிட்டுள்ளது. அதனால் சில முறை மட்டுமே நாங்கள் இருவரும் சந்திக்க முடியும். இது சாதரணமான விஷயம் அல்ல.. இதற்கு நிறைய விஷயங்கள் தியாகம் செய்ய வேண்டியதாக இருக்கும். நாங்கள் எங்கள் உறவில் வலிமையுடன் இருக்கின்றோம்.

மேலும் தொடர்ந்து அனைவரது திருமண வாழ்கையும் வித்யாசமானது (எங்களுடையதும்) எல்லாவற்றிலும் சவால்கள் உள்ளது. அதனால் ஒப்பிட கூடாது. நாங்கள் எங்கள் திருமண வாழ்க்கையில் மென்மேலும் வளர்ந்து எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம். “ என்று பதிவிட்டுள்ளார்/

இதையடுத்து பென்னி தயாள் மனைவியின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

A post shared by Food, Fashion & Lifestyle | Catherine Dayal (@catherinedayal)

‘கஸ்டடி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? - தளபதி 68 பட இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட கலகலப்பான வீடியோ உள்ளே..
சினிமா

‘கஸ்டடி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? - தளபதி 68 பட இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட கலகலப்பான வீடியோ உள்ளே..

இரண்டு நாட்கள் திரையரங்குகள் செயல்படாது..! போராட்டத்தில் ஈடுபட்ட உரிமையாளர்கள்.. – அதிர்ச்சியில் ரசிகர்கள்.. பின்னணி இதோ..
சினிமா

இரண்டு நாட்கள் திரையரங்குகள் செயல்படாது..! போராட்டத்தில் ஈடுபட்ட உரிமையாளர்கள்.. – அதிர்ச்சியில் ரசிகர்கள்.. பின்னணி இதோ..

‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு டிக்கெட் விலை குறைப்பு..! இது தான் காரணம்..– வைரலாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..
சினிமா

‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு டிக்கெட் விலை குறைப்பு..! இது தான் காரணம்..– வைரலாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..