ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட ஸ்பெஷல் அப்டேட்... தயாரிப்பு நிறுவனத்தின் பதிலால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஜெயம் ரவி நயன்தாராவின் இறைவன் பட ருசிகர தகவல்,passion studios shared a update of jayam ravi nayanthara in iraivan movie | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து தரமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவியின் இறைவன் திரைப்படம் குறித்த முக்கிய தகவலை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பகிர்ந்து கொண்டது. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் எனும் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவி ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த சைரன் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தனது திரைப்பயணத்தின் 30வது திரைப்படமாக சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் & ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் JR30 படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்க நட்டி, விடிவி கணேஷ் ஆகியோர் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இந்த வரிசையில் நடிகர் ஜெயம் ரவியின் 32 வது திரைப்படமாக வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் தயாரிப்பில் பிரம்மாண்ட படைப்பாக 100 கோடி ரூபாய் செலவில் உருவாகும் JR32 படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார். இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார் என்பதும் கூடுதல் தகவலாக இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

இதனிடையே வாமனன், என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் I.அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் தான் இறைவன். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இறைவன் திரைப்படத்திற்கு ஹரி.K.வேதாந்த் ஒளிப்பதிவில், மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் தயாரிக்கும் இறைவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்த இதர அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடித்திருக்கும் டக்கர் திரைப்படம் வருகிற ஜூன் 9ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதுகுறித்த ட்விட்டர் பதிவில் ரசிகர் ஒருவர் “இறைவன் அப்டேட்” என தயாரிப்பு நிறுவனத்தை குறிப்பிட்டு கேட்க, அதற்கு பதிலளித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் “வெகு வெகு விரைவில்” என பதிவிட்டுள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இந்த பதிலால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து இருக்கின்றனர். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அந்த பதிவு இதோ…
 

Very Very Soon 🙌🏻#Iraivan https://t.co/dX8MAvOV4y

— Passion Studios (@PassionStudios_) June 6, 2023

சினிமா

"இந்த பயணத்தில் மிகவும் மகிழ்ச்சி..!"- வீரமே ஜெயம் என மாவீரன் பட மாஸ் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்... ட்ரெண்டாகும் புது GLIMPSE இதோ!

லோகேஷ் கனகராஜின் அசோசியேட் இயக்குனருடன் கைகோர்த்த சதீஷ்... வித்தைக்காரன் பட அசத்தலான லேட்டஸ்ட் அப்டேட் இதோ!
சினிமா

லோகேஷ் கனகராஜின் அசோசியேட் இயக்குனருடன் கைகோர்த்த சதீஷ்... வித்தைக்காரன் பட அசத்தலான லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

கோலாகலமாக நடந்த துணிவு, வீரன் படங்களின் பாடலாசிரியர் வைசாக்கின் திருமணம்... வைரலாகும் புகைப்படம் இதோ!
சினிமா

கோலாகலமாக நடந்த துணிவு, வீரன் படங்களின் பாடலாசிரியர் வைசாக்கின் திருமணம்... வைரலாகும் புகைப்படம் இதோ!