புது பவருடன் ஹிப் ஹாப் ஆதி செய்யும் சேட்டைகள்.. வீரன் படத்தில் இடம் பெற்ற முக்கிய காட்சியை வெளியிட்ட படக்குழு – வைரல் வீடியோ உள்ளே..

வீரன் பட சிறப்பு காட்சியினை வெளியிட்ட படக்குழு இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே - Hip hop adhi veeran movie second sneak peek out now | Galatta

தமிழ் ரசிகர்களை ஆல்பம் பாடல்கள் மூலம் உற்சாகப் படுத்தி வந்த ஹிப் ஹாப் ஆதி பின் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, நயன்தாரா, சிவகார்த்திகேயன்போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து கவனம் பெற்றார். பின்னர் தன் இசையினால் கவர்ந்து இளமை துள்ளும் நடிகராகவும் வளர்ந்து நிற்பவர் ஹிப்ஹாப் ஆதி. இசையமைப்பாளர் தொடங்கி நடிகர் இயக்குனர் என்று பல்துறையில் தனித்துவமாக விளங்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி சம கால குழந்தைகளுக்கு பிடித்த ஹீரோவாக வலம் வருகிறார். மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஆதி பின் நான் சிரித்தால், நட்பே துணை, சிவக்குமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்தார். தற்போது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிடி சார்’ படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்து வருகிறார்.

இதனிடையே  ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோவாக கோலிவிட்டில் களம் இறங்கியிருக்கும் திரைப்படம் ‘வீரன்’. அட்டகாசமான காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்து கவனம் பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ARK சரவணன் இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் ‘வீரன்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து வினய், ஆதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், நக்கலைட்ஸ் சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் டிமேனன் ஒளிப்பதிவு செய்ய ஜிகே பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார். ஹிப் ஹாப் ஆதியின் இசையில் வெளியான பாடல்கள் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கவனம் ஈர்க்க செய்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் கடந்த மே 2ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘வீரன்’ திரைப்படத்திற்கு தமிழகமெங்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டாவது வாரத்தை நோக்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வீரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதியின் வீரன் படத்தில் இடம் பெற்றுள்ள முக்கியமான காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

பன்னாட்டு நிறுவனம் ஊருக்குள் வரக்கூடாது என்று வீரன் சொல்வதாக ஊர் தலைவர் சொல்ல அதற்கு மறுப்பு தெரிவித்து முனீஸ்காந்த் மற்றும் காளி வெங்கட் பேசி வருகின்றனர். இதனிடையே முனீஸ்காந்த் மைன்ட் கண்ட்ரோல் மூலமாக கட்டுபடுத்துகிறார் வீரன் ஹிப் ஹாப் ஆதி. சிரிக்க வைத்து ரசிக்க வைக்கும் இந்த காட்சி தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

 

இந்தியாவின் முதல் முறையாக.. டக்கர் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

இந்தியாவின் முதல் முறையாக.. டக்கர் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரல் வீடியோ உள்ளே..

உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகளை நட்ட நடிகர் சௌந்தரராஜா .. குவியும் பாராட்டுகள் – விவரம் உள்ளே..
சினிமா

உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகளை நட்ட நடிகர் சௌந்தரராஜா .. குவியும் பாராட்டுகள் – விவரம் உள்ளே..

தளபதி 68 டைட்டில் குறித்த அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

தளபதி 68 டைட்டில் குறித்த அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ உள்ளே..