தனது சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து ஆகச் சிறந்த நடிகையாகவும் இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாகவும் வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முன்னதாக வரும் நவம்பர் 4ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளிவரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

அடுத்ததாக தெலுங்கில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்திருக்கும் சர்க்காரு வாரி பாட்டா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் அரபிக்கடலின்டே சிம்ஹம் திரைப்படத்திலும் நடித்துள்ளார். குறிப்பாக முதல் முறை இயக்குனர் செல்வராகவன் நடிகராக களமிறங்கும் சாணி காயிதம் படத்திலும் கதாநாயகியாக  நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் இயக்குனர் நாகேஷ் குக்குன்னூர் இயக்கத்தில்,தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள குட் லக் சகி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. நடிகர்கள் ஜெகபதி பாபு மற்றும் ஆதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள குட் லக் சகி திரைப்படத்திற்கு சிரத்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வெளியிடும் குட் லக் சகி திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், வருகிற நவம்பர் 26ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் குட் லக் சகி வெளியாகும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

The big day is not so far away!#GoodLuckSakhiOn26thNov@KeerthyOfficial @IamJagguBhai #NageshKukunoor @ThisIsDSP #DilRaju @sudheerbza @shravyavarma @WorthAShotArts @MangoMusicLabel pic.twitter.com/662BhIGEla

— Aadhi🎭 (@AadhiOfficial) November 1, 2021