விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராகும்,சீரியல் நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தார் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் இவர் நடித்த லிப்ட் படம் சமீபத்தில் வெளியானது.

இந்த படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படங்களில் நடிப்பது மட்டுமின்றி டாக்டர்,Beast உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி அசத்தி வருகிறார் கவின்.அடுத்ததாக ஆகாஷ்வாணி என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார், இதன் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து கவின் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ரௌடி பிக்சர்ஸ் சார்பில் இணைந்து தயாரிக்கும் ஊர்குருவி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் கவின்.இந்த படத்தினை அறிமுக இயக்குனர் அருண் இயக்குகிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இவர் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.இந்த படத்தின் அறிவிப்பினை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

And on this auspicious day, we are super happy to announce our next project starring @Kavin_m_0431, directed by @arunpatrician and produced by Yours Truly! 🔥🔥♥️♥️@VigneshShivN #Nayanthara @Kavin_m_0431 @arunpatrician @DoneChannel1#OorKuruvi #Kavin03 #RowdyPictures pic.twitter.com/3Bv2zlJNyz

— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) October 15, 2021