விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராகும்,சீரியல் நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தார் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

இதனை அடுத்து இவர் நடித்த அஸ்கு மாறோ என்ற ஆல்பம் பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் இவர் நடித்த லிப்ட் படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.

சமீபத்தில் இந்த படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படங்களில் நடிப்பது மட்டுமின்றி டாக்டர்,Beast உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி அசத்தி வருகிறார் கவின்.அடுத்ததாக கவின் ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸில் கவின் நாயகனாக நடிக்கிறார்.ரெபா மோனிகா ஜான் இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.செம ரொமான்டிக் காதல் கதையாக இந்த சீரிஸ் உருவாகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.தற்போது இந்த தொடரின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது என்ற தகவலை ரெபா மோனிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

#Aakashavaani web series shoot wrapped up@Kavin_m_0431 @Reba_Monica
Director #EnocAble pic.twitter.com/FlJFfXClwB

— Hello Studios (@Hello_Studioss) October 8, 2021