ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் வெளிவந்தது உலகநாயகன் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் கூட்டணியின் KH234 திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர். நாயகன் படத்திற்கு பிறகு 35 ஆண்டுகளுக்கு பின் இணையும் இந்த மெகா கூட்டணியின் இந்த பிரம்மாண்ட படைப்பிற்கான டைட்டில் என்னவாக இருக்கும் என ஏதேதோ கருத்துகள் நுழைய நிலையில் அத்தனைக்கும் வைக்கும் வகையில் THUG LIFE சம்பவமாக KH234 டைட்டில் தற்போது வெளிவந்துள்ளது. ஆம் திரைப்படத்தின் டைட்டிலே "THUG LIFE" தான். வறண்ட நிலப்பரப்பில் இருக்கும் உலக நாயகன் நீளமான முடியும் முறுக்கு மீசையும் பெரிய தாடியும் என மிரட்டலான நிற்கிறார். அவருக்கு எதிரே வித்தியாசமான ஐந்து வெவ்வேறு ஆயுதங்கள் கொண்ட எதிரிகள் இருக்கிறார்கள். அப்போது "என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன்" என தனது சிம்ம குரலில் பேசத் தொடங்குகிறார் உலக நாயகன். தொடர்ந்து வரும் எதிரிகள் ஒவ்வொருவரையும் அடித்து நொறுக்கும் இந்த டீசர் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நாளை நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது அதற்கு முன்னரே மிகப்பெரிய கொண்டாட்டம் கொடுக்கும் வகையில் தற்போது வெளிவந்திருக்கும் இந்த THUG LIFE திரைப்படத்தின் டீசர் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியின் THUG LIFE திரைப்படத்தில் ஜெயம் ரவி, திரிஷா மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்திருப்பதாக சற்று முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் இந்த THUG LIFE திரைப்படத்திற்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் THUG LIFE திரைப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். கலை இயக்குனராக ஷர்மிஷ்டா ராய், ஆடை வடிவமைப்பாளர்களாக அமிர்தா ராம் மற்றும் ஏகா லக்கானி ஆகியோர் இணைந்துள்ளனர்.

இந்த டீசரில் ஓரிடத்தில், "பொறக்கும் போதே என் தலையில எழுதி வச்சுட்டாங்க சக்திவேல் நாயக்க ஒரு கிரிமினல் குண்டா யாக்கூஸா... யாக்கூஸா-ன்னா ஜப்பான் மொழியில் கேங்ஸ்டர்ன்னு சொன்னாங்க" என உலகநாயகன் பேசி இருப்பார் அது போலவே பாரம்பரிய ஜப்பானிய உடையில் இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் ஜப்பானியர்களின் பாரம்பரிய தற்காப்பு கலை போல ஒரு வித ஸ்டைலில் சண்டையிடுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. ஆக மொத்தத்தில் நாயகன் போலவே இந்த THUG LIFE படமும் ஒரு கேங்ஸ்டர் படம் தான் என்பது போல தற்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்திருக்கின்றனர். ஆனால் தற்போது இந்த டீசரில் இருக்கும் ஸ்டைலில் படம் இருக்குமா அல்லது என்ன மாதிரியான ஒரு படமாக இருக்கும் என்ற கேள்விகளும் தற்போது எழுந்திருக்கின்றன. இதற்கான விடைகளுக்கு வரும் நாட்களுக்காக காத்திருப்போம். ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர வைக்கும் வகையில் வெளி வந்திருக்கும் உலகநாயகன் கமலஹாசன் மணிரத்தினம் கூட்டணியின் THUG LIFE பட அதிரடியான டீசர் இதோ…