ஜிகர்தண்டா DOUBLEX: கார்த்திக் சுப்பராஜ், ராகவா லாரன்ஸ் & SJ சூர்யா கூட்டணியின் பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் ட்ரெய்லர் இதோ!

ஜிகர்தண்டா DOUBLEX பட தீக்குச்சி பாடல் வெளியீடு,ragava lawrence sj suryah in jigarthanda doublex trailer out now | Galatta

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இணைந்த நடித்துள்ள ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தனக்கென தனி பாணியில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தன்னுடைய ஸ்டைலில் கதை சொல்லும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ட்ரேட்மார்க் ஸ்டைலில் உருவாக்கி இருக்கும் இந்த ஜிகர்தண்டா DOUBLEX படத்தில் ட்ரெய்லர் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. காலகட்டங்களில் நடக்கும் கதையாக தயாராகி இருக்கும் இந்த ஜிகர்தண்டா DOUBLEX படத்திலிருந்து தற்போது வந்திருக்கும் ட்ரைலர் ஆரம்பத்தில் வரும் வசனமே, " இப்போ இருக்கிற சினிமாவில இப்படி ஒரு கருப்பு ஹீரோவா நினைச்சு பாருங்களேன் சிரிப்பு வருதா இல்லையா உங்களுக்கு" என ஆரம்பிக்கிறது. அடுத்த வசனமே ராகவா லாரன்ஸின் குரலில், "கருப்பா இருந்தா கேவலமா" என வருகிறது. 

விஷயம் என்னவென்றால் இதே 1975 ஆம் ஆண்டு தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர் தான் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் செய்திருக்கும் "சம்பவம் என்ன" என ரசிகர்களுக்கு தற்போது ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2வது பாகமான ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தை தற்போது கார்த்திக் சுப்பராஜ் உருவாக்கி இருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகர்களாகவும் இயக்குனர்களாகவும் திகழும் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இருவரும் இணைந்து இந்த ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். 

மேலும் ஷைன் டேம் சாக்கோ, சத்யன், அரவிந்த் ஆகாஷ், இளவரசு மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஜிகர்தண்டா DOUBLE X படத்திற்கு திரு என்கிற திருநாவுக்கரசு அவர்களின் ஒளிப்பதிவில், ஷபிக் முஹம்மத் அலி படத்தொகுப்பு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க விவேக் பாடல்களை எழுதி இருக்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படம் வருகிற நவம்பர் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. பக்கா ஆக்சன் காமெடி படமாக கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் இரண்டாவது படமாக வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஜிகர்தண்டா படத்தைப் போலவே ஒரு இயக்குனருக்கும் கேங்ஸ்டருக்கும் இடையிலான அட்டகாசமான ஆக்சன் படமாக ஜிகர்தண்டா DOUBLE X தயாராகி இருக்கிறது.இந்த தீபாவளிக்கு விருந்தாக நடிகர் கார்த்தியின் ஜப்பான் மற்றும் நடிகர் விக்ரம் பிரபுவின் ரெய்டு ஆகிய படங்களோடு இணைந்து வெளிவர இருக்கும் ராகவா லாரன்ஸ் SJ.சூர்யாவின் ஜிகர்தண்டா DOUBLEX திரைப்படத்தின் டிரைலரை கீழே உள்ள லிங்கை காணலாம்.