துருவ நட்சத்திரம்: சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் மனதை மயக்கும் "நரச்ச முடி" பாடல் இதோ!

சீயான் விக்ரம் கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் பட நரச்ச முடி பாடல்,chiyaan vikram in dhruva natchathiram movie naracha mudi song | Galatta

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலிருந்து நரச்ச முடி பாடல் வெளியானது. துருவ நட்சத்திரம் சாப்டர் 1 யுத்த காண்டம் திரைப்படத்திலிருந்து ரசிகர்களுக்கு ரொமான்டிக் சர்ப்ரைஸாக தற்போது வெளிவந்திருக்கும் பாடல் தான் "நரச்ச முடி" ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையில் தாமரை அவர்கள் எழுதியிருக்கும் இந்த அழகான பாடலை பிரபல பின்னணி பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதி அவர்கள் பாடியிருக்கிறார். பல மாதங்களுக்கு முன்பு துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் முதல் பாடலாக வந்த ஒரு மனம் பாடல் மக்களின் மனதை கொள்ளையடித்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த "HIS NAME IS JOHN" பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது இந்த வரிசையில் தற்போது அடுத்த பாடலாக வெளிவந்திருக்கும் இந்த நரைச்ச முடி பாடலும் அனைவரது மனதையும் மயக்கும் வகையில் அழகான மெலடி பாடலாக வந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் பக்கா ஸ்டைலான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் முதல் முறை சீயான் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா, SR.கதிர் மற்றும் விஷ்ணு தேவ் என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றி இருக்கும் இந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு செய்ய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பக்கா ஆக்சன் படமாக தயாராகி இருக்கும் இந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு பிரபல ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பெண் ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - சீயான் விக்ரம் கூட்டணியில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெந்று தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு ரிலீஸாக இருப்பதாகவும் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்திருந்தார். முதல் அறிவிப்பு டீசர் வெளிவந்ததிலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த ஆறு ஆண்டுகளில் வெவ்வேறு கட்டங்களாக பலமுறை படப்பிடிப்புகள் நடைபெற்று கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. வருகிற நவம்பர் 24ஆம் தேதி சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தன்னுடைய ஸ்டைலில் பல படங்களை கொடுத்து வந்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் தனது வழக்கமான டிராக்கில் இருந்து மாறி புதிய ஒரு சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் கெளதம் வாசுதேவ் மேனனின் அந்த ஸ்டைலில் இதுவரை பார்த்திராத மிரட்டலான ஆக்ஷனில் வெளிவர இருக்கும் இந்த துருவ நட்சத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக ஜொலிக்கும் என வாழ்த்துவோம். துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நரச்ச முடி பாடல் இதோ…