"21 வருஷம் கழிச்சு... தளபதி 68 ல் கௌரவ வேடமா?"- தளபதி விஜய் உடன் இணைவது குறித்து உண்மையை உடைத்த ஜெய்! ட்ரெண்டிங் வீடியோ

விஜயுடன் 21 வருடங்கள் கழித்து தளபதி 68 ல் இணைவது பற்றி பேசிய ஜெய்,Jai wants to act with Vijay again in thalapathy 68 | Galatta

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜெய் லேபிள் வெப் சீரிஸுக்காக நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் போது தளபதி 68 படம் குறித்தும் 21 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி விஜய் உடன் மீண்டும் இணைய விரும்புவது குறித்தும் பேசி இருக்கிறார். அந்த பேட்டியில்

"அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் தளபதி 68 திரைப்படத்தை இயக்குகிறார் அதில் உங்களுக்கு ஏதாவது ரோல் இருக்கிறதா? ஏனென்றால் உங்களுடைய டீமில் இருந்து சில பேருடைய பெயர் ஏற்கனவே வந்துவிட்டது" என கேட்டபோது, "அவ்வளவுதான் என்று நினைக்கிறேன் அதற்கு மேல் யாரும் இருக்க மாட்டார்கள்" பதில் அளித்தார். தொடர்ந்து அவரிடம், "இல்லை சரோஜா திரைப்படத்தில் திடீரென நீங்கள் ஒரு கௌரவ வேடத்தில் வந்தீர்கள் அது மாதிரி ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டபோது, “கௌரவ வேடம் மாதிரியா அப்படி கௌரவ வேடத்தில் நடிக்க இன்னும் கூப்பிடவில்லை. கூப்பிட்டால் முதல் ஆளாக நான் நிற்பேன். நீங்கள் இந்த மாதிரி வீடியோ போட்டால் கண்டிப்பாக கூப்பிடுவார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நானும் அவரும் (தளபதி விஜய்) இணைந்து நடித்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் போராட்டம் பண்ணுங்கள் ஸ்ட்ரைக்  பண்ணுங்கள்.” என பதில் அளித்திருக்கிறார்

ட்ரிபிள்ஸ் என்னும் ரொமான்டிக் காமெடி வெப்சீரிஸை தொடர்ந்து நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்த அதிரடி த்ரில்லர் வெப் சீரிஸாக வர இருக்கிறது லேபிள். கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி படங்களை இயக்கிய பிரபல இயக்குனராகவும், பாடகர் நடிகர் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராகவும் திகழும் அருண் ராஜா காமராஜ் இந்த லேபிள் வெப் சீரிஸை எழுதி இயக்கியிருக்கிறார். நடிகர் ஜெய் உடன் இணைந்து மாஸ்டர் மகேந்திரன் மற்றும் தன்யா ஹோப் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த லேபிள் வெப் சீரிஸில் ஹரிசங்கர் நாராயணன், இளவரசு, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீமண், சரண்ராஜ், DRK.கிரண், ரமேஷ் திலக் மற்றும் ஜஸ்பர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த லேபிள் வெப் சீரிஸ்க்கு சாம்.CS இசையமைத்திருக்கிறார். தீபாவளி வெளியீடாக வருகிற நவம்பர் 10ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஜெயின் லேபிள் வெப் சீரிஸ் ஒளிபரப்பாக இருக்கிறது

அடுத்ததாக நடிகை நயன்தாராவின் 75வது திரைப்படமாக உருவாகி வரும் அன்னபூரணி திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெய் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கும் பிரேக்கிங் நியூஸ் என்னும் திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கிறது. முன்னதாக தனது 32 வது திரைப்படமாக உருவாகும் 1 KM என்ற படத்தில் நடித்து வரும் நடிகர் ஜெய் தொடர்ந்து அறம் படத்தின் இயக்குனர் கோபி நயனார் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்திலும் இயக்குனர் அட்லி தயாரிப்பில் உருவாகும் மற்றொரு புதிய படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே லேபிள் வெப் சீரிஸ் சிறப்பு நேர்காணலில் நமது கலாட்டா தமிழ் சேனலில் பேசிய நடிகர் ஜெய் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட அந்த வீடியோ இதோ…