KH234 சர்ப்ரைஸ்: உலகநாயகன் கமல்ஹாசன் - மணிரத்னத்தின் அதிரடி பட டைட்டில் அறிவிப்பு டீசருக்கு முன் வந்த மிரட்டலான போஸ்டர் இதோ!

கமல்ஹாசன் மணிரத்னத்தின் KH234 பட டைட்டில் டீசருக்கு முன் வந்த புது போஸ்டர்,kamal haasan mani ratnam in kh234 movie new poster out now | Galatta

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் வருவதற்கு முன்பு புதிய போஸ்டர் ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்று நவம்பர் 6ம் தேதி மாலை KH234 படத்தின் டைட்டிலை அறிவிக்கும் டீசர் ஒன்று வெளிவர இருக்கும் சூழலில் தற்போது மிரட்டலான புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கின்றனர். சர்ப்ரைஸாக வந்த இந்த புதிய போஸ்டரில் இருக்கும் கமல்ஹாசன் அவர்களின் லுக்கும் அதன் பின்னணியும் இந்த படம் ஒரு பீரியட் படமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலமாக சீயான் விக்ரமின் தங்கலான், சூர்யாவின் கங்குவா உள்ளிட்ட படங்கள் பீரியட் ஆக்சன் திரைப்படங்களாக தயாராகி வரும் நிலையில் அந்த வரிசையில் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க ஒரு அட்டகாசமான பீரியட் படமாக இந்த படம் தயாராகும் என்றால் அது ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கும் மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  

ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் என்றென்றும் கொண்டாடும் திரைப்படங்களில் உச்சத்தில் இருக்கும் படம் தான் “நாயகன்” இந்திய திரை உலகின் மிகப்பெரிய ஆளுமைகளான இயக்குனர் மணிரத்னம் - உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்த இந்த நாயகன் வெறும் படமாக மட்டுமல்லாமல் திரை துறையில் நுழைந்த பலருக்கும் நுழையப் போகும் பலருக்கும் ஒரு பாடமாகவே திகழ்கிறது. அப்படியான ஒரு ஈடு இணையற்ற படைப்புக்குப் பிறகு மீண்டும் இணையாத இந்த இயக்குனர் மணிரத்னம் - உலகநாயகன் கமலஹாசன் ஜோடி மீண்டும் எப்போது இணையும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த நிலையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது KH234 திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார்கள்.

KH234 துவக்க விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் KH234 திரைப்படத்தில் பணியாற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களை படக்குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது படப்பிடிப்பும் தொடங்கப்பட்டிருக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்த KH234 திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் KH234 திரைப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். கலை இயக்குனராக ஷர்மிஷ்டா ராய், ஆடை வடிவமைப்பாளர்களாக அமிர்தா ராம் மற்றும் ஏகா லக்கானி ஆகியோர் இணைந்துள்ளனர். முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய போது, “மணிரத்னம் அவர்கள், KH234 திரைப்படத்தின் டீசருக்காக பணியாற்றி வருகிறார். வருகிற நவம்பர் 7ஆம் தேதி அந்த டீசர் வெளியாகும்” என தெரிவித்தார். உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி நாளை KH234 படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது.

நாளை நவம்பர் 7ஆம் தேதி உலக நாயகனின் பிறந்தநாளில் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியின் KH234 திரைப்படத்தின் டீசர் வெளிவர இருக்கும் நிலையில் அதன் டைட்டிலை ஒரு நாள் முன்பே இன்று நவம்பர் 6ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியிட இருப்பதாக பட குழு அறிவித்ததனர். இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் KH234 படத்தின் அந்த புதிய போஸ்டர் இதோ…
 

Embrace the EPIC REVEAL!
Title announcement video at 5pm today! Stay tuned for an unforgettable experience!#TitleAnnouncementToday5pm #KH234 #Ulaganayagan #KamalHaasan #HBDKamalSir #HBDUlaganayagan @ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @MShenbagamoort3pic.twitter.com/HxAZGjGBoR

— Turmeric Media (@turmericmediaTM) November 6, 2023