தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா DOUBLE x திரைப்படம் கடந்த நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி வெளியீடாக ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனராக மட்டும் அல்லாமல் நல்ல கதாசிரியராக இயக்குனர் ஷங்கர் தற்போது இயக்கி வரும் கேம் சேஞ்சர் எனும் பொலிட்டிக்கல் திரில்லர் திரைப்படத்திற்கு கதை எழுதி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு பரத்வா ஜனங்கள் அவர்களுடனான நேர்காணலில் பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு அசத்தலாக பதில் அளித்தார் அந்த வகையில்

“கேம் சேஞ்சர் படத்திற்கு நீங்கள் கதை எழுதி இருக்கிறீர்கள். அது நீங்கள் வேறு ஒருவருக்காக எழுதுகிறீர்கள் அல்லவா? நீங்கள் கார்த்திக் சுப்பராஜுக்காக எழுதவில்லை, சங்கர் அவர்களுக்காக எழுதுகிறீர்கள் அதில் அவர் ஏதாவது மாற்றம் சொன்னால் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?” எனக் கேட்டபோது, “அது எப்படி நடந்தது என்றால் முதலில் எனக்கு இது மிகவும் சந்தோசமான மிகவும் பெருமையான ஒரு தருணம். ஏனென்றால், சங்கர் சார் மாதிரியான ஒரு ஆள் நம்மிடம் கதை கேட்பது. அது ஒரு அரசியல் சார்ந்த படம் அந்தக் கதையை சில மாதங்களுக்கு முன்பே நாங்கள் பேசி எழுதி முடித்து நாங்கள் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தோம். அப்போது எங்கள் குழுவில் இருக்கும் நபர்கள் சொன்னார்கள் இந்த கதை வேறு ஒரு தளத்தில் இருக்கிறது. ஷங்கர் சார் அவர்களின் தளத்தில் இருக்கிறது வேறு ஒரு பெரிய ஹீரோ இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பது போல இருந்தது. எனக்கும் இது மிகவும் சீக்கிரமாகவும் அவ்வளவு அதிகமாக இப்போது அரசியலுக்குள் போக வேண்டிய எண்ணமும் இல்லாததால் அந்த சமயத்தில் சங்கர் சார் கேட்டதும் அவரிடம், “சார் நான் ஒரு கதை எழுதினேன் அதை கேட்கும் போதே “சங்கர் சார் படம் மாதிரி ஒரு கதை” என எல்லோரும் சொன்னார்கள் அதை நான் சொல்கிறேன்.என்றேன். அவருக்கு அது பிடித்தது எனவே அந்த கதையை நான் அவரிடம் கொடுத்து விட்டேன். அதற்கு அவர் விரிவான திரைக்கதை அமைத்திருக்கிறார். அந்த திரைக்கதையை சங்கர் சார் எப்படி செய்திருக்கிறார் என்பதை பார்க்க நான் மிகவும் ஆர்வத்தோடு இருக்கிறேன். அதன் பிறகு ஒரு முறை பேசியபோது நான் எழுதியதிலிருந்து ஒரு குறிப்பிட்ட காட்சியை அவர் எப்படி படமாக்க போகிறார் என்பதையும் அந்த காட்சி எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதையும் அவர் விவரித்தார். அதற்குள் அவர் இன்னும் எத்தனை விஷயங்களை உள்ளே வைக்கிறார் அந்த படத்தை இன்னும் ஜனரஞ்சகமாக அவர் எப்படி மாற்றுகிறார் என்பதை நான் ஆவலுடன் பார்ப்பதற்கு காத்திருக்கிறேன் என அவரிடம் சொன்னேன்.” என்றார். மேலும் அவரிடம், “நாமே ஒரு கிரியேட்டர் நம்மையே ஒருவர் இப்படி செய்ய சொல்கிறார்.. என இந்த விஷயத்தில் உங்களுக்கு ஈகோ இல்லையா?” என கேட்டபோது, “சுத்தமாக இல்லை மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் தான் உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.