பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இயக்குனர் மணிரத்னம் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியின் திரைப்படத்தில் தற்போது ஜெயம் ரவி, திரிஷா மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக தொடங்கப்பட்டிருக்கிறது KH234. நாயகன் எனும் மாபெரும் படைப்பிற்கு பிறகு கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் KH234 திரைப்படத்தின் மூலம் ஓகே கண்மணி படத்திற்கு பிறகு 2வது முறையாக துல்கர் சல்மான் இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் இணைகிறார். அதேபோல் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஜெயம் ரவியும் பிறகு 2வது முறையாக இணைகிறார். ஆயுத எழுத்து மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்களை தொடர்ந்து மணிரத்னம் அவர்களோடு 3வது முறையாக த்ரிஷா, KH234 திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார்.

ஏற்கனவே மன்மதன் அன்பு மற்றும் தூங்காவனம் உள்ளிட்ட படங்களில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களோடு இணைந்து நடித்த நடிகை திரிஷா KH234 திரைப்படத்தில் 3வது முறையாக கைகோர்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் முதல் முறையாக உலகநாயகனுடன் கைகோர்த்து இருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த KH234 திரைப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. KH234 துவக்க விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் KH234 திரைப்படத்தில் பணியாற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களை படக்குழு அறிவித்தது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்த KH234 திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் KH234 திரைப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். கலை இயக்குனராக ஷர்மிஷ்டா ராய், ஆடை வடிவமைப்பாளர்களாக அமிர்தா ராம் மற்றும் ஏகா லக்கானி ஆகியோர் இணைந்துள்ளனர்.

முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய போது, “மணிரத்னம் அவர்கள், KH234 திரைப்படத்தின் டீசருக்காக பணியாற்றி வருகிறார். வருகிற நவம்பர் 7ஆம் தேதி அந்த டீசர் வெளியாகும்” என தெரிவித்தார். உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி நாளை KH234 படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. நாளை நவம்பர் 7ஆம் தேதி உலக நாயகனின் பிறந்தநாளில் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியின் KH234 திரைப்படத்தின் டீசர் வெளிவர இருக்கும் நிலையில் அதன் டைட்டிலை ஒரு நாள் முன்பே இன்று நவம்பர் 6ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியிட இருப்பதாக பட குழு அறிவித்ததனர். இதனிடையே சர்ப்ரைஸாக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் KH234 படத்தில் இணைந்து நடிக்கும் நடிகர் நடிகைகளை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் திரிஷா ஆகியோர் இயக்குனர் மணிரத்னம் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களோடு KH234 படத்தில் இணைந்திருப்பதாக வெளிவந்த அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…

With utmost delight, we greet and welcome the dazzling actor @trishtrashers in our exciting journey#TitleAnnouncementToday5pm #KH234 #Ulaganayagan #KamalHaasan #HBDKamalSir #HBDUlaganayagan@ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @dulQuer @MShenbagamoort3pic.twitter.com/wMgDpcxPZ2

— Raaj Kamal Films International (@RKFI) November 6, 2023

Excited to collaborate with @dulQuer on this epic journey...#TitleAnnouncementToday5pm#Ulaganayagan #KamalHaasan #HBDUlaganayagan #HBDKamalSir@ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @MShenbagamoort3 @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_ @turmericmediaTMpic.twitter.com/A2mlRiXcy9

— Raaj Kamal Films International (@RKFI) November 6, 2023