இலங்கை தமிழரான தர்ஷன் விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த மாபெரும் வரவேற்பையடுத்து தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் ரீமேக்-ஆக தமிழில் தயாராகும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, பிக் பாஸ் லாஸ்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் ஆர்கே செல்லுலாய்ட் நிறுவனம் தயாரித்துள்ள கூகுள் குட்டப்பா திரைப்படத்தை கல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க ஒளிப்பதிவாளர் ஆர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கூகுள் குட்டப்பா படத்திற்காக ஒரு பாடலை முன்னணி இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் பாடியுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள “அலை அலை” எனும் அழகிய பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுத ஜீவி பிரகாஷ்குமார் பாடியுள்ளார். விரைவில் இப்பாடல் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Did a special romantic song with our beloved @gvprakash. Fab singing bro.#AlaiAlai for #KoogleKuttapa with lyrics by @madhankarky
@ksravikumardir @Sabari_gireesn @gurusaravanan @TharshanShant #Losliya @iYogiBabu @Prankster_Ragul @Kavitha_Stylist @proyuvraaj @iamSandy_Off pic.twitter.com/NPhGqNiaEe

— Ghibran (@GhibranOfficial) October 20, 2021