தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்தவர் இயக்குனர் AR.முருகதாஸ். அஜித் குமார் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான தீனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான AR.முருகதாஸ் தனது 2வது திரைப்படமாக புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுடன் கைகோர்த்த ரமணா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைவிட பெரிய வெற்றியை அடையும் வகையில் AR.முருகதாஸ் உருவாக்கிய படம் கஜினி. முதல் முறை சூர்யாவுடன் கைகோர்த்த AR.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கஜினி திரைப்படம் ரசிகள்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மேலும் ஆமீர்கான் கதாநாயகனாக நடிக்க ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட கஜினி படத்தையும் AR.முருகதாஸ் இயக்க பாலிவுட்டிலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது கஜினி.

அதிலிருந்து AR.முருகதாஸ் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் இந்திய அளவில் கவனிக்கபட்டன. அந்த வகையில் மீண்டும் சூர்யாவுடன் இணைந்த AR.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ஏழாம் அறிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முதல்முறையாக தளபதி விஜய் உடன் AR.முருகதாஸ் இணைந்தார். தளபதி விஜய் - AR.முருகதாஸ் கூட்டணியில் முதல் படமாக வெளிவந்த துப்பாக்கி திரைப்படம் மெகா ஹிட் ஆனதோடு தளபதி விஜயின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாகவும் அமைந்தது. தொடர்ந்து கத்தி & சர்கார் என அடுத்தடுத்து தளபதி விஜய் உடன் AR.முருகதாஸ் கைகோர்த்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றிகளை பெற்றன.

கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல் முறை AR.முருகதாஸ் இணைந்த தர்பார் திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீசானது. இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தரமான படைப்புகளை தொடர்ந்து தயாரித்து வரும் AR.முருகதாஸ் அவர்கள் எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான் கராத்தே, ரங்கூன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். இந்த வரிசையில் இவரது தயாரிப்பில் அடுத்த திரைப்படமாக தயாராகி இருக்கும் திரைப்படம் 1947 ஆகஸ்ட் 16. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ஏ.ஆர்.முருகதாஸ் ப்ரொடக்சன் சார்பில் தயாரித்துள்ள 16 ஆகஸ்ட் 1947 திரைப்படத்தை பர்பிள் புள் என்டர்டைன்மென்ட் மற்றும் காட் பிளஸ் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன.

இயக்குனர் NS.பொன் குமார் இயக்கத்தில் நடிகர்கள் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள 16 ஆகஸ்ட் 1947 படத்தில் குக் வித் கோமாளி புகழ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ரேவதி ஷர்மா ரிச்சர்ட் அஸ்தன் ஜேசன் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செல்வகுமார். SK ஒளிப்பதிவில், 16 ஆகஸ்ட் 1947 திரைப்படத்திற்கு சுதர்சன்.R படத்தொகுப்பு செய்துள்ள ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த 1947 ஆகஸ்ட் 16 திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் 16 ஆகஸ்ட் 1947 திரைப்படம் வருகிற ஏப்ரல் 7-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…