"மாவீரன் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் இப்படிதான்.." புகழ்ந்து தள்ளிய மிஷ்கின்.. ஆர்பரித்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ இதோ..

சிவகார்த்திகேயனை புகழ்ந்த இயக்குனர் மிஷ்கின் - Director Mysskin about sivakarthikeyan | Galatta

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் மிஷ்கின். கலைநயத்துடன் ஒரு காட்சியை கட்டமைப்பதிலும் உணர்வுபூர்வமாக பார்வையாளர்களை கட்டியிழுக்கும் வல்லவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவு கவனிக்கப்பட்டார். அதன் பின் அட்டகாசமான தொடர் கிரைம் திரில்லர் கதைகளத்தில் தமிழ் சினிமாவில் வலம் வந்து முன்னணி இயக்குனரானார் மிஷ்கின். 10 திரைப்படங்களில் இயக்குனராக பணியாற்றிய மிஷ்கினை பின் தொடர பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அவரது பேச்சுகளை கேட்டு குதுகலிக்கும் ரசிகர்களும் உள்ளனர். இயக்கம் மட்டுமல்லாமல் நடிக்கவும் செய்தார். ஆரம்பத்தில் அவர் படங்களில் நடித்து வந்த மிஷ்கின். தொடர்ந்து மற்ற இயக்குனர் படங்களிலும் நடிக்க தொடங்கினார்.  அதன் படி அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றது. குறிப்பாக ‘சவரக்கத்தி,’சூப்பர் டீலக்ஸ்.

தற்போது மிஷ்கின் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி நடிக்கும் பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் அதே நேரத்தில் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான  ‘லியோ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில்  மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாவீரன் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் MIT கல்லூரி ஆண்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் மாணவர்களிடம் தனது அனுபவம் மற்றும் திரை அனுபவம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசிய அவர்,

"ஒரு நேர்காணலில் சிவகார்த்திகேயன் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கையில் நான் உடனே 'எனக்கு அவரை பற்றி தெரியாது' என்று சொல்லி விட்டேன். அந்த நேரத்தில் நான் அந்த பையன் படம் பார்த்ததில்லை அதனால் அப்படி சொன்னேன். அதன் பின் சிவகார்த்திகேயன் வளர ஆரம்பித்தார். அப்போது நான் சொன்ன அந்த பதிலை நிறைய பேர் விமர்சித்தார்கள். நிஜமாவே எனக்கு அவரை பற்றி அன்று தெரியாது.சில வருடங்கள் கழித்து அவருடன் வேலை பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் நான் என்ன பார்த்தேனா.. நிறைய ஹீரோக்கள் எதாவொரு பின்புலத்துடன் திரைத்துறைக்கு வருகிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் அதெல்லாம் இல்லாமல் வந்தார். அவர் திறமையினாலும் உழைப்பினாலும் இன்னிக்கு தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.

16 மணி நேரம் கூட அந்த பையன் வேலை பார்ப்பான். அதனால் தான் அவன் வளர்ந்து வருகிறான். எனக்கு அதனாலே அவருடன் வேலை பார்த்தது பிடித்து போய்விட்டது. இவரை போன்ற மனிதர்களின் வளர்ச்சியைதான் உங்களை போன்ற மாணவர்கள் எடுத்துக்காட்டாக எடுத்து கொள்ள வேண்டும்.” என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உற்சாகத்தில் வீடியோவை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். 

இறுதிகட்டத்தில் உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’..  - வைரலாகும் ‘வைகை புயல்’ வடிவேலுவின் புகைப்படங்கள் இதோ..
சினிமா

இறுதிகட்டத்தில் உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’.. - வைரலாகும் ‘வைகை புயல்’ வடிவேலுவின் புகைப்படங்கள் இதோ..

“நான் இதை மறக்கவே மாட்டேன் கார்த்தி சார்” – நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த கவின் – ரசிகர்களால்  வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“நான் இதை மறக்கவே மாட்டேன் கார்த்தி சார்” – நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த கவின் – ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

நினைவுகளை தட்டி எழுப்பும் ‘மெலடி கிங்’ வித்யாசாகரின் பிறந்தநாளை  கொண்டாடும் ரசிகர்கள்  -  குவியும் வாழ்த்துகள்..  சிறப்பு கட்டுரை இதோ..
சினிமா

நினைவுகளை தட்டி எழுப்பும் ‘மெலடி கிங்’ வித்யாசாகரின் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள் - குவியும் வாழ்த்துகள்.. சிறப்பு கட்டுரை இதோ..