தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். பெரும்பாலான பாடல்களை ரசிகர்களை முனுமுனுக்க வைத்து அவர் ரசனைகளில் ஓடவிட்டவர். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தில் இடம் பெற்ற வா வாத்தி பாடல் இரு வடிவில் வெளியிட்டு இரு பாடல்களையும் டிரெண்ட் ஆக்கினார் ஜிவி பிரகாஷ். இது போன்ற பல பாடல்களை இதுவரை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது ஜிவி பிரகாஷ் குமார் பல முக்கிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதன்படி வெற்றிமாறன் - சூர்யா இணையும் வாடிவாசல், தனுஷின் கேப்டன் மில்லர், சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக், விஷாலின் மார்க் ஆண்டனி மற்றும் சீயான் விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன.இசை மட்டுமல்ல நடிப்பிலும் அசத்தி வருகிறார். அட்டகாசமான கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு விதவிதமான வகையில் உற்சாகப்படுத்தி வருகிறார் ஜி வி பிரகாஷ் குமார்.
அதன் படி தற்போது ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து நடித்து வரும் திரைப்படம் ‘கள்வன்’ பிரபல திரைப்படமான ராட்சசன், முன்டாசுப்பட்டி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த PV சங்கர் கள்வன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருடன் இணைந்து கதாநாயகியாக இவானா, இயக்குனர் பாரதிராஜா, KPY தீனா, ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னதாக படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து எதிர்பார்ப்பை உயர்த்தியது. இந்நிலையில் கள்வன் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்
அப்படத்தின் கதாநாயகனும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார். இதுகுறித்த அப்டேட்டை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் நாயகி இவானா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு “கள்வன் முதல் பாடல் வரும் மார்ச் 4 ம் தேதி வெளியாகவுள்ளது.வாத்தி படத்திற்கு பிறகு வெளியாகும் பாடல் இது.. நான் மிகுந்த உற்சாகத்துடன் எதிர்பார்ப்புடன் இருக்கின்றேன்” என்று பதிவிட்டு உள்ளார். இதனையடுத்து அந்த பதிவு ரசிகர்களால் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.