தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது நடிப்பில் கடைசியாக அத்ரங்கி ரே படம் வெளியானது.
இதனை தொடர்ந்து தனுஷ் மாறன்,வாத்தி,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம்,வாத்தி என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.
மாறன் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.கார்த்திக் நரேன் இந்த படத்தினை இயக்கியுள்ளார், ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோஹனன் நடித்துள்ளனர்.இந்த படத்தில் ஸ்ம்ருதி வெங்கட்,சமுத்திரக்கனி,மஹேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் மார்ச் 11ஆம் தேதி நாளை வெளியாகவுள்ளது.படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் படத்தின் ரகளையான ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
#Maaran - Streaming from 5 pm, Tomorrow..#MaaranFromTomorrow #MaaranOnHotstar @dhanushkraja @MalavikaM_ @karthicknaren_M @gvprakash @SathyaJyothi @thondankani @smruthi_venkat @Actor_Mahendran @KK_actoroffl @Lyricist_Vivek pic.twitter.com/nYtETJPGHQ
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) March 10, 2022