நடந்து கொண்டிருக்கும் ஐ பி எல் 2023 தொடர் ஒரு வழியாக இறுதி போட்டியை நெருங்கி கொண்டிருக்கின்றது. ஏற்கனவே இறுதி சுற்றில் கோப்பையை வெல்ல மிக அருகில் எம் எஸ் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி சென்று விட்டது. இது தொடர்பாக சென்னை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். தற்போது வரும் மே 28 ம் தேதி நடைபெறவுள்ள இறுதிபோட்டிக்கு முன்னேற ஒரு படியில் போட்டியிட போகும் அணி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ். இரு அணிகளும் பலத்த போட்டியில் இன்று ஈடுபடவுள்ளனர்.

இந்நிலையில் நடப்பு ஐ பில் எல் தொடரை நிறைவகா முடித்து வைக்க ஐ பி எல் குழுமத்தினால் ஐ பி எல் நிறைவு விழா ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இந்த விழாவில் பல கலைநிகழ்சிகள் நடைபெறவுள்ளது. இதில் பிரபல பின்னணி பாடகி ஜோனிடா காந்தி பாடல் பாடவுள்ளார். இதனை ஐபிஎல் குழுமம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் அந்த பதிவினை மிகப்பெரிய அளவில் வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிரபலமான பாடல்களை பாடியவர் பின்னணி பாடகி ஜோனிட்ட காந்தி. பெரும்பாலும் ஏ ஆர் ரஹ்மான்,அனிரூத் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். இதில் அனிருத் இசையில் கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் அமைந்துள்ள அரபிக் குத்து பாடலை ஜோனிட்ட காந்தி அனிருத் உடன் இணைந்து பாடியிருப்பார். இந்த பாடல் உலகளவில் மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆனது. மேலும் இந்த ஆண்டு வெளியான வாரிசு திரைப்படத்தில் அமைந்துள்ள ‘ஜிமிக்கி பொண்ணு’ பாடலை பாடியிருப்பார். எப்படியோ இறுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இடம் பெற்றுள்ளது. எனவே ஜோனிட்டா காந்தி சார்பில் அரபிக் குத்து அல்லது ஜிமிக்கி பொண்ணு பாடல் அந்த நிறைவு விழாவில் அதிகம் வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.