ஆதித்ய கரிகாலன் மரணம்.. ரசிகர்களால் வைரலாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் மிக முக்கியமான காட்சி.. வீடியோ இதோ..

PS 2 படத்தின் மிக முக்கியமான காட்சியை வெளியிட்ட படக்குழு வீடியோ உள்ளே - Ponniyin selvan 2 team released chinnanjiru nilave video song | Galatta

இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் அப்படம் உருவாக்கியது. அதன்படி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் கடந்த ஏப்ரல் 28 ம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்திய திரைப்படமாக வெளியானது. ஆரவாரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு மக்கள் பெருமளவு அவர்களின் ஆதரவை கொடுத்து மிகப்பெரிய வெற்றியை பொன்னியின் செல்வன்  2 திரைப்படம் அடைந்துள்ளது. அதன்படி உலகளவில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரூ300 கோடிக்கு மேல் வசூல் பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் படத்தில் மிக முக்கியமான காட்சியாக இடம் பெற்றுள்ள ஆதித்ய கரிகாலன் மரணம் தொடர்பான காட்சி மற்றும் அதனுடன் சின்னசிறு நிலவே பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

பழி வாங்க காத்திருக்கும் நந்தினியின் கையினால் ஆதித்ய கரிகாலன் மரணிக்கும் காட்சி படத்தில் மிகவும் அதிகம் பேசப்பட்ட காட்சியாகும், ஆதித்ய கரிகாலனாக சியான் விக்ரமும் நந்தினியாக ஐஸ்வர்யா ராய் இணைந்து இந்த காட்சியின் தரத்தை உயர்த்தியிருப்பார்கள்.  தற்போது அந்த காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் அந்த வீடியோவினை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் ஏ ஆர் ரஹ்மான் இசையில் இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் உருவான சின்னஞ்சிறு நிலவே (மறுமுறை) பாடலை ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் மகள் கதிஜா ரஹ்மான் பாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய சாதனை படைத்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், லால், பிரபு, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, அஷ்வின் என்று பல முன்னணி நட்சத்திரங்கள் நடிதுள்ளனர். லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்திருப்பார்

சம்யுக்தா மீது போலீஸ் புகார் இருக்கா? உண்மையை உடைத்த சம்யுக்தா அம்மா.. முழு வீடியோ உள்ளே.
சினிமா

சம்யுக்தா மீது போலீஸ் புகார் இருக்கா? உண்மையை உடைத்த சம்யுக்தா அம்மா.. முழு வீடியோ உள்ளே.

‘அயோத்தி’ பட வெற்றியை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் சசிக்குமார் – வைரலாகும் அட்டகாசமான அறிவிப்பு இதோ..
சினிமா

‘அயோத்தி’ பட வெற்றியை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் சசிக்குமார் – வைரலாகும் அட்டகாசமான அறிவிப்பு இதோ..

உலகநாயகன் கமல் ஹாசனுக்கு ஆகச்சிறந்த கலைஞன் விருது.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – விவரம் இதோ..
சினிமா

உலகநாயகன் கமல் ஹாசனுக்கு ஆகச்சிறந்த கலைஞன் விருது.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – விவரம் இதோ..