தமிழ் திரையுலகில் சிறந்த குணசித்திர கதாபாத்திரங்களை கச்சிதமாக நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் நடிகை வினோதினி. கூத்து பட்டறையில் பல்வேறு நாடங்களில் நடித்து வந்த வினோதினி, தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் அறிமுகமாகி பிபன் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிதூ வந்தார். அதன்படி, ஒகே கண்மணி, ஜிகர்தண்டா, சூரரைப் போற்று, கோமாளி போன்ற பல முக்கிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் வினோதினி. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த நந்தினி கதாபாத்திரத்தின் தோழியாக வினோதினி நடித்திருப்பார்.

திரைப்படங்களில் பிரபலமான வினோதினி சமீப காலமாக ட்விட்டர் பக்கத்தில் பல கருத்துக்களை அரசியல் சார்ந்தும் ஜிஎஸ்டி விவகாரம் போன்ற விஷயங்களை கருத்துகளாக வீடியோவுடன் பகிர்ந்து வந்தார். சமீபத்தில் மல்யுத்த போராட்டம் குறித்தும் விமர்சித்து வந்தார். இவரது வீடயுயோக்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அவரது பல்வேறு அரசியல் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் பேசுபொருளாகின.ட்விட்டரில் சமூக கருத்துகளை நேரடியாக துணிச்சலாக பேசி வந்த வினோதினி வைத்தியநாதன் தற்போது கமல் ஹாசன் கமல் ஹாசன் அவர்களின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.

நேற்று ஜூன் 23 அன்று கமல் ஹாசன் முன்னிலையில் மய்யம் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இந்த நிகழ்வை புகைப்படமாக ட்விட்டரில் பதிவிட்டு அதனுடன்.

கடவுள் டு அஞ்ஞானவாதி: நான் உன்ன படைச்சேன்… நீ எனக்கு என்ன செஞ்சே?

அஞ்ஞானவாதி: நீ படைச்ச எல்லாருக்கிட்டையும் போயி டேய் நீங்க எல்லாரும் கடவுள்தாண்டா, அதுக்கு எதுக்குடா உங்களுக்குள்ள சண்ட போட்டுக்குறீங்கன்னு சொல்லிட்டிருக்கேன் சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: மய்யத்துல என்ன பொறுப்புல இருக்க?

அஞ்ஞானவாதி: இருக்கேங்குற பொறுப்புல இருக்கேன் சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, நீ பிறப்பால் இந்து.. இந்து மதக்கொள்கைய அடிப்படையா கொண்ட கட்சிக்குப் போயிருக்கலாமே?

அஞ்ஞானவாதி: வாரத்துக்கு ஒரு முறை கள்ள ஆடியோ வீடியோ ரெக்கார்டிங் இருக்கான்னு வீட்ட, காரெல்லாம் debug பண்றதுக்கு காசில்ல சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ பகுத்தறிவு பேசுற கட்சி? அஞ்ஞானவாதி: பகுத்தறிவா? அப்படினா என்னன்னு கேக்குறாங்க சாமி. அதுலயும் யாகம்லாம் செய்யுறாங்க.

கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ கரப்ஷன்? மதவாதப் பிரிவினை?

அஞ்ஞானவாதி: எந்தப்பக்கம் நடந்தாலும் குரல் கொடுப்பேன் சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, அப்போ ஏன் மய்யம்? ஒரு சீட்டுகூட இல்லையே?

அஞ்ஞானவாதி: சீட்டு குலுக்கிப்போட்டு இந்த பதவி எடுத்துக்கோ அந்தப்பதவி எடுத்துக்கோங்குறதுக்கு இங்க வாரிசு அரசியல் இல்லையே சாமி. சார்ஜ் சீட் செய்யப்பட்ட ஆளுங்களும் இல்லையே சாமி… சீட்டு விளையாடுறத ஆதரிக்கிற கூட்டமும்…

கடவுள்: போதும் போதும்… சீட் என்று மூன்று முறைக்கு மேல் சொல்லியதால் நீ ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டாய்.

அஞ்ஞானவாதி: இப்போதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது சாமி.

ஆரம்பிக்கலாங்களா? மய்ய அரசியல…

என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். தற்போது வினோதினி அவர்கள் பதிவு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.