“பொறுப்புள்ள மனிதனாக என் கடமைகளை செய்து வருகிறேன்” நெகிழ்ந்த ஜிவி பிரகாஷ் – ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த ஜிவி பிரகாஷ் குமார் வைரல் பதிவு இதோ - Gv Prakash kumar thanks note to his fans | Galatta

தென்னிந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் ‘பொல்லாதவன்’. ‘ஆயிரத்தில் ஒருவன்’ ‘மயக்கம் என்ன’, ‘மதராசப் பட்டினம்’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவராக வளர்ந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தனுஷ் என்று தமிழ் ஸ்டார்களின் படங்களுக்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை நடித்து வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் ஜிவி பிரகாஷ் குமார் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைத்து வருகிறார்.

 

இந்த ஆண்டு அவரது இசையில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி மற்றும் ருத்ரன், காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ஆகிய படங்கள் இசையில் கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது கேப்டன் மில்லர், மார்க் ஆந்தனி, தங்கலான், ஜப்பான், சைரன், SK21 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் அதே நேரத்தில், ‘அடியே’, ‘இடி முழக்கம்’, ‘கள்வன்’ ஆகிய படங்களில் நடித்தும் வருகிறார்.தெலுங்கு  திரையுலகில் ‘VNR’ , ‘டைகர்’ , இந்தியில் அக்ஷய் குமார் இயக்குனர் கூட்டணியில் உருவாகும் சூரரை போற்று ரீமேக் என்று பல படங்களில் பிஸியாக பணியாற்றி வருகிரார்ர் ஜிவி பிரகாஷ் குமார்.

 

இந்நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய ஜிவி பிரகாஷ் குமார் அவர்களுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர். தற்போது அனைவரது வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட பதிவில்,

"உங்கள் தோழனாக, பொறுப்புள்ள மனிதனாக, திரைக்கலைஞனாக நான் எப்போதும் என் கடமையை சரியாக செய்து வருவதாகவே, வார்த்தைகளால் விவரிக்க முடியாத உங்கள் ஒவ்வொருவரின் பேரன்பையும் பிறந்த நாள் வாழ்த்துகளாக பெறுவதன் மூலம் உணர்கிறேன். இடைவிடாத வெற்றித்தொடர் ஓட்டத்தை சாத்தியப்படுத்தும் அனைவரும் நன்றி" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.  இதையடுத்து ஜிவி பிரகாஷ் அவர்களின் பதிவு இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

❤️✨💫🙏 pic.twitter.com/H6RIQK173f

— G.V.Prakash Kumar (@gvprakash) June 13, 2023

Netflix ஆங்கில வெப் சீரிஸில் இடம் பெற்ற தளபதி விஜயின் பாடல்... உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

Netflix ஆங்கில வெப் சீரிஸில் இடம் பெற்ற தளபதி விஜயின் பாடல்... உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ உள்ளே..

சூப்பர் சிங்கர் விட்டு தூக்கிட்டாங்களா? உண்மையை உடைத்த அனந்த் வைத்யநாதன்.. - சுவாரஸ்யமான தகவல்களுடன் முழு வீடியோ உள்ளே..
சினிமா

சூப்பர் சிங்கர் விட்டு தூக்கிட்டாங்களா? உண்மையை உடைத்த அனந்த் வைத்யநாதன்.. - சுவாரஸ்யமான தகவல்களுடன் முழு வீடியோ உள்ளே..

கிரிக்கெட் மைதான தொடக்க விழாவிற்கு பிரபல நடிகரை சிறப்பு விருந்தினராக அழைத்த நடராஜன்.. – விவரம் உள்ளே..
சினிமா

கிரிக்கெட் மைதான தொடக்க விழாவிற்கு பிரபல நடிகரை சிறப்பு விருந்தினராக அழைத்த நடராஜன்.. – விவரம் உள்ளே..