'10-15 வருஷம் முன்னாடி நயன் அந்த படம் பண்ணிருந்தா..?'- வைரலாகும் பிரியா பவானி சங்கரின் ஸ்பெஷல் பேட்டி இதோ!

பொம்மை பட நாயகி ப்ரியா பவானி சங்கரின் ஸ்பெஷல் பேட்டி,Priya bhavani shankar about nayanthara in galatta tamil interview | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர், கதாநாயகிகளுக்காக கதாப்பாத்திரங்களை எழுதுவது இல்லை என்பது குறித்து பேசியிருக்கிறார். முன்னதாக இந்த 2023 ஆம் ஆண்டில் இதுவரை மட்டும் சிலம்பரசன்.TRன் பத்து தல, ஜெயம் ரவியின் அகிலன், ராகவா லாரனஸின் ருத்ரன் மற்றும் கல்யாணம் கமநீயம் எனும் தெலுங்கு படம் உட்பட 4 படங்கள் பிரியா பவானி சங்கர் நடித்து வெளிவந்துள்ளன. தொடர்ந்து டிமான்டி காலணி 2, ஜீப்ரா, அரண்மணை 4 ஆகிய படங்களில் நடிக்க இருக்கும் பிரியா பவானி சங்கர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதனிடையே மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு SJசூர்யா - பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருக்கும் பொம்மை திரைப்படம் வரும் ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த நடிகை பிரியா பவானி சங்கர் தனது திரைப் பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில், “பொதுவாக இயக்குனர்கள் எல்லாம் சொல்வார்கள் அல்லவா இந்த கதாபாத்திரமே உங்களுக்காக தான் எழுதப்பட்டது என்பது போல சொல்வார்கள் ஆனால் ஸ்பாட்டில் வேறு ஒன்றாக இருக்கும் அதை எப்படி கையாள்வீர்கள் என கேட்டபோது, “ப்ரீ ப்ரொடக்ஷனில் இருக்கும் போது தான் அது குறித்து பரிந்துரைக்க முடியும் ஆனால் ஸ்பாட்டில் அது மாறுகிறது என்றால் எதுவும் செய்யாமல் இருப்பது தான் சிறந்தது. இதற்கு மேல் நாம் சொல்லி எதுவும் மாற்றப் போவது கிடையாது. மேம்படுத்துவது என்பது வேறு ஒரு நடிகரிடம் என்ன உறுதி அளித்தீர்கள் ஆனால் என்ன எடுக்கிறீர்கள் என்பது வேறாக இருக்கும் போது முடிந்தவரை டேமேஜ் ஆகாமல் குறைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்வது நல்லது. எனக்கென யார் உட்கார்ந்து கதாபாத்திரங்களை எழுத போகிறார்கள். கடைசியாக எந்த ஒரு பெரிய கமர்சியல் படத்தில் ஹீரோயினுக்காக கதாபாத்திரத்தை வலுவாக எழுதி இருந்தார்கள் சொல்லுங்கள்." என அவர் கேட்டார். “அறம் படத்தில் செய்திருக்கிறார்களே” என நாம் சொன்ன போது, "இல்லை கமர்சியலாக பெரிய நட்சத்திரம் நடிகர்கள் நடிக்கும் படத்தில் கதாநாயகன் கதாபாத்திரம் வலுவாக இருப்பதில்லை. ஏனென்றால் கதை ஹீரோக்களுக்கு தான் எழுதுகிறார்கள். எனவே அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும். அறம் உட்பட நீங்கள் சொல்லும் படங்கள் எல்லாமே சிறப்பு தான் ஆனால் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு நயன் அந்த படத்தை செய்திருந்தார் என்றால் நீங்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு போய் தியேட்டரில் பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போதும் அவர் ரஜினி சார் படம் பண்ணுகிறார் விஜய் சார் படம் பண்ணுகிறார் 5 - 10 நாட்கள் ஷூட்டிங் இருக்கக்கூடிய கதாபாத்திரங்களில் இப்போதும் நடிக்கிறார்." என தெரிவித்திருக்கிறார். மேலும் நயன்தாரா குறித்தும் இதர சில சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் பிரியா பவானி சங்கர் பேசிய முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

'உங்க ஃபேவரட் பொம்மை எது?
சினிமா

'உங்க ஃபேவரட் பொம்மை எது?"- SJசூர்யாவின் பொம்மை பட நாயகி பிரியா பவானி சங்கரின் பதில் இதுதான்! வீடியோ உள்ளே

MSதோனி தயாரிப்பில் முதல் தமிழ் படம் LGM... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இதோ!
சினிமா

MSதோனி தயாரிப்பில் முதல் தமிழ் படம் LGM... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இதோ!

கீர்த்தி சுரேஷின் அசத்தலான நடனத்தில் வந்த ஸ்பெஷல் ட்ரீட்... மாமன்னன் பட கொடி பறக்கிற காலம் பாடல் இதோ!
சினிமா

கீர்த்தி சுரேஷின் அசத்தலான நடனத்தில் வந்த ஸ்பெஷல் ட்ரீட்... மாமன்னன் பட கொடி பறக்கிற காலம் பாடல் இதோ!