MSதோனி தயாரிப்பில் முதல் தமிழ் படம் LGM... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இதோ!

MSதோனி தயாரிப்பில் வரும் LGM படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அறிவிப்பு,Ms dhoni productions lgm movie first single release announcement | Galatta

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஃபேவரட் கிரிக்கெட் வீரராகவும் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானுமான மகேந்திர சிங் தோனி அவர்கள் தற்போது சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கிறார். அந்த வகையில் தனது தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படமான LGM (Let's Get Married) திரைப்படத்தின் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய 2023 ஆம் ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி கடந்த மே 28ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருந்தது. ஆனால் கனமழையின் காரணமாக போட்டி அன்று போட்டி நடைபெறாததால் அடுத்த நாளில் (மே 29ஆம் தேதி) நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற இந்த ஐபிஎல் 2023 இறுதி போட்டியில் கடைசி பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

தனக்கே உரித்தான பாணியில் ஹெலிகாப்டர் ஷாட்டெல்லாம் அடித்து சிக்ஸர்களை பறக்க விட்ட தல தோனி கிரிக்கெட்டை தாண்டி திரையுலகிலும் சிக்ஸர் அடிக்க எண்ணி,ஓ கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி சாக்ஷி உடன் இணைந்து தோனி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்தார். இந்த தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படைப்பாக தமிழில் முதல் படத்தை தயாரித்துள்ளது. அந்த வகையில் தோனி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் முதல் படமாக உருவாகி வரும் LGM (Let's Get Married) படத்தை அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி கதை, திரைக்கதை, வசனங்கள், எழுதி இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடித்துள்ள LGM (Let's Get Married) படத்தில் லவ் டுடே நாயகி இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நதியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நகைச்சுவை நடிகர் யோகி பாபு மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

இது போக தீபா, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், ஆர்ஜே விஜய், வினோதினி வைத்தியநாதன் என ஒரு நடிகர்கள் பட்டாளமே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் வகையில் பக்கா ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து டெல்டா ஸ்டுடியோ நிறுவனம் வழங்கும் LGM (Let's Get Married) திரைப்படத்திற்கு, விஷ்வாஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவில், பிரதீப் படத்தொகுப்பு செய்ய, இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகி இருக்கும் LGM திரைப்படத்திற்கு தினேஷ் மாஸ்டர் மற்றும் சாண்டி மாஸ்டர் இருவரும் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த LGM (Let's Get Married) திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், LGM திரைப்படத்தின் இறுதி கட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன்  பணிகளில் படக்குழுவினர் தற்போது மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் வெளிவந்த LGM திரைப்படத்தின் டீசர் பெரும் கவனத்தை பெற்ற நிலையில், படத்தின் முதல் பாடலுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக LGM திரைப்படத்தின் முதல் பாடலான சலனா பாடல் வருகிற ஜூன் 15ஆம் தேதி வெளிவரும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…

 

Gear up as we bring to you the first single from #LGM- Let’s Get Married on the 15th of June! #Salana #LGMOnSonyMusic pic.twitter.com/y6tsWgLCpa

— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) June 13, 2023

தனுஷ் பட இயக்குனர் - துல்கர் சல்மான் கூட்டணியில் இணைந்த ஜீவி பிரகாஷ்... பிறந்தநாள் பரிசாக வந்த செம அப்டேட் இதோ!
சினிமா

தனுஷ் பட இயக்குனர் - துல்கர் சல்மான் கூட்டணியில் இணைந்த ஜீவி பிரகாஷ்... பிறந்தநாள் பரிசாக வந்த செம அப்டேட் இதோ!

பிரபல வில்லன் நடிகர் கசான் கான் காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகம்!
சினிமா

பிரபல வில்லன் நடிகர் கசான் கான் காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகம்!

சினிமா

"தனுஷ் இப்போ பெரிய ஸ்டார்!"- 'காதல் கொண்டேன் ஆதி' சுதீப் சாரங்கியின் ஸ்பெஷல் பேட்டி இதோ!