சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கரின் கலக்கல் காம்போவில் மாவீரன் பட ஸ்பெஷல் ட்ரீட்... அட்டகாசமான வண்ணாரப்பேட்டையில பாடல் இதோ!

மாவீரன் பட வண்ணாரப்பேட்டையில பாடல் வெளியீடு,Sivakarthikeyan in maaveeran movie second single vannarapettayila song out now | Galatta

சிவகார்த்திகேயனின் திரைப்படங்களிலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக வெளிவர இருக்கும் மாவீரன் திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலான வண்ணாரப்பேட்டையில எனும் பாடல் தற்போது வெளியானது. தொலைக்காட்சியின் வழியாக மக்களின் மனதில் இடம் பிடித்து தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக வளர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவராலும் ரசிக்கப்படுகின்றன. அந்த வகையில் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு படங்களும் அவருடைய திரைப் பயணத்தின் குறிப்பிடப்படும் படங்களாக அமைய இருக்கின்றன. குறிப்பாக இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களோடு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தெரிகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வரும் என ரசிகர்கள் அவர்களோடு காத்திருக்கின்றனர்.

அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் SK21 திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . சமீபத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கப்பட்ட நிலையில், இதர அறிவிப்புகள் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

இந்த வரிசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் தான் மாவீரன். முன்னதாக யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் வென்று ஆஸ்காருக்கான போட்டி வரை சென்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகளும் விருமன் படத்தின் நாயகியுமான அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முதல் முறையாக முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான (OTT) டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வரும் ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது மாவீரன் திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலாக வண்ணாரப்பேட்டையில எனும் பாடல் தற்போது வெளிவந்துள்ளது. நாயகன் சிவகார்த்திகேயன் மற்றும் நாயகி அதிதி சங்கர் இணைந்து இப்பாடலை பாடி இருக்கின்றனர். அட்டகாசமான மாவீரன் பட வண்ணாரப்பேட்டையில பாடல் இதோ…
 

MSதோனி தயாரிப்பில் முதல் தமிழ் படம் LGM... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இதோ!
சினிமா

MSதோனி தயாரிப்பில் முதல் தமிழ் படம் LGM... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இதோ!

கீர்த்தி சுரேஷின் அசத்தலான நடனத்தில் வந்த ஸ்பெஷல் ட்ரீட்... மாமன்னன் பட கொடி பறக்கிற காலம் பாடல் இதோ!
சினிமா

கீர்த்தி சுரேஷின் அசத்தலான நடனத்தில் வந்த ஸ்பெஷல் ட்ரீட்... மாமன்னன் பட கொடி பறக்கிற காலம் பாடல் இதோ!

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட புது சர்ப்ரைஸ்... ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அட்டகாசமான GLIMPSE இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட புது சர்ப்ரைஸ்... ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அட்டகாசமான GLIMPSE இதோ!