சிவகார்த்திகேயனின் மாவீரன் பட புது சர்ப்ரைஸ்... ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அட்டகாசமான GLIMPSE இதோ!

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட 2வது பாடல் GLIMPSE வீடியோ,Sivakarthikeyan in maaveeran movie second single vannarapettayila glimpse | Galatta

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவர இருக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் இருந்து சர்ப்ரைஸாக புதிய GLIMPSE வீடியோ ஒன்று வெளிவந்தது.  தமிழ் சினிமாவின் இன்றியமையாத கதாநாயகர்களின் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த ப்ரின்ஸ் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியது. இருப்பினும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரும் திரைப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. 

அந்த வகையில் முன்னதாக இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் SK21 திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . 

இதுபோக முதல் முறையாக முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே  சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் தான் மாவீரன் யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள மாவீரன் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். 

முதல் முறையாக முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான (OTT) டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வரும் ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. மாவீரன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “வண்ணாரப்பேட்டையில” எனும் பாடல் நாளை ஜூன் 14ஆம் தேதி வெளிவர உள்ளது. பாடலாசிரியர் யுகபாரதி அவர்கள் எழுதியிருக்கும் இந்த பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் இணைந்து பாடி இருக்கின்றனர். இதனை அறிவிக்கும் வகையில் கலகலப்பான ப்ரோமோ வீடியோ நேற்று படக்குழுவினர் தற்போது வெளியிட்டனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலிருந்து வண்ணாரப்பேட்டையில பாடலின் GLIMPSE வீடியோவை பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அந்த GLIMPSE வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

Here’s the glimpse of #Vannarapettayila from #Maaveeran!🎵🎺

Song releasing tomorrow at 11am!😇

🎙️Singers @Siva_Kartikeyan & @AditiShankarofl
🎵A @bharathsankar12 Musical!🥁
✍🏼 Lyricist @YugabhaarathiYb @madonneashwin @iamarunviswa @DirectorMysskin #Saritha @suneeltollywoodpic.twitter.com/40EQWHob1u

— Shanthi Talkies (@ShanthiTalkies) June 13, 2023