தனுஷ் பட இயக்குனர் - துல்கர் சல்மான் கூட்டணியில் இணைந்த ஜீவி பிரகாஷ்... பிறந்தநாள் பரிசாக வந்த செம அப்டேட் இதோ!

தனுஷ் பட இயக்குனர் - துல்கர் சல்மான் கூட்டணியில் இணைந்த ஜீவி பிரகாஷ்,Gv prakash kumar joins with dulquer salmaan venky atluri next movie | Galatta

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் மிகச் சரியாக பயணம் செய்து வருபவர் ஜீவி பிரகாஷ் குமார். முன்னதாக இந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் தனுஷ் நடிப்பில் வெளிவந்து 100 கோடி வசூல் செய்த வாத்தி, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ருத்ரன், ஆர்யா நடிப்பில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மற்றும் சமீபத்தில் இயக்குனர் AL.விஜய் இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக நேரடியாக ஜியோ சினிமா தளத்தில் வெளிவந்த பூ (BOO) திரைப்படத்தின் பாடல்களுக்கும், இசையமைத்துள்ள ஜீவி பிரகாஷ் குமார் சமீபத்தில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த மாடர்ன் லவ் சென்னை எனும் ஆன்தாலாஜி வெப் சீரிஸுக்கும் இசை அமைத்துள்ளார். தொடரந்து அடுத்தடுத்து ஜீவி பிரகாஷ் குமார் இசையில் வெளிவரும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. 

அந்த வகையில் முதல் முறையாக சூர்யா - இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் வாடிவாசல், இயக்குனர் பா.ரஞ்சித் - சீயான் விக்ரம் கூட்டணியில் பக்கா பீரியட் ஆக்சன் படமாக தயாராகி வரும் தங்கலான், கார்த்தியின் 25 வது படமாக தயாராகி வரும் ஜப்பான், தனுஷ் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகும் கேப்டன் மில்லர், இயக்குனர் வசந்த பாலனின் அநீதி, இயக்குனர் தங்கர்பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, ஜெயம் ரவியின் சைரன், உலக நாயகன் கமல்ஹாசன் உடன் சிவகார்த்திகேயன் இணைந்திருக்கும் SK21, விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வித்தியாசமான டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக வரும் மார்க் ஆண்டனி, ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1, கங்கணா ரணாவத் நடிப்பில் இந்திரா காந்தி அம்மையாரின் பயோபிக் படமாக தயாராகும் எமர்ஜென்சி என அடுத்தடுத்து அட்டகாசமான படைப்புகள் ஜீவி பிரகாஷின் இசையில் தயாராகி வருகின்றன. 

இந்த வரிசையில் கடந்த பிப்ரவரியில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாக 100 கோடிக்கு மேல் வசூலித்த வாத்தி திரைப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு ஜீவி இசையமைக்கிறார். வாத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான சித்தாரா என்டர்டைன்மென்ட்ஸ் , ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளது. மேலும் இந்த புதிய திரைப்படத்தை அடுத்த 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ஜீவி பிரகாஷ் குமாரின் பிறந்த நாளான இன்று ஜூன் 13ஆம் தேதி இந்த புதிய திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைப்பதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பு இதோ…
 

Welcoming the Enchanting Composer @gvprakash onboard for another BLOCKBUSTER Collaboration 💥🎵🎹

Team #Production24 wishes you a very Happy & musical Birthday! #HBDGVPrakash 🥳@dulQuer #VenkyAtluri @vamsi84 #SaiSoujanya @SitharaEnts @Fortune4Cinemas #SrikaraStudios pic.twitter.com/40aOoqFS2S

— Sithara Entertainments (@SitharaEnts) June 13, 2023

உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தோடு களமிறங்கும் அமீரின் அரசியல் படம்! ருசிகர தகவல் உள்ளே
சினிமா

உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தோடு களமிறங்கும் அமீரின் அரசியல் படம்! ருசிகர தகவல் உள்ளே

'KH233 அறிவிப்பின் முன்னோட்டமா?'- முதல்முறை வெளிவந்த கமல்ஹாசன் - H.வினோத் இணைந்திருக்கும் புகைப்படங்கள்! விவரம் இதோ
சினிமா

'KH233 அறிவிப்பின் முன்னோட்டமா?'- முதல்முறை வெளிவந்த கமல்ஹாசன் - H.வினோத் இணைந்திருக்கும் புகைப்படங்கள்! விவரம் இதோ

சினிமா

"எக்கச்சக்க ஆக்ஷன்... ரெடி ஸ்டெடி போ..!"- அட்லீயின் ஜவான் பட பக்கா மாஸ் அப்டேட் கொடுத்த ஷாரூக் கான்! விவரம் உள்ளே