'உங்க ஃபேவரட் பொம்மை எது?"- SJசூர்யாவின் பொம்மை பட நாயகி பிரியா பவானி சங்கரின் பதில் இதுதான்! வீடியோ உள்ளே

தனது ஃபேவரட் பொம்மை பற்றி பிரியா பவானி சங்கரின் பதில்,priya bhavani shankar about her favourite dolls in galatta tamil interview | Galatta

SJ.சூர்யாவின் பொம்மை திரைப்படத்தின் கதாநாயகியான பிரியா பவானி சங்கர் தனது ஃபேவரட் பொம்மை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில், 2023 ஆம் ஆண்டில் இதுவரை மட்டும் சிலம்பரசன்.TRன் பத்து தல, ஜெயம் ரவியின் அகிலன், ராகவா லாரனஸின் ருத்ரன் மற்றும் கல்யாணம் கமநீயம் எனும் தெலுங்கு படம் உட்பட 4 படங்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து டிமான்டி காலணி 2, ஜீப்ரா, அரண்மணை 4 ஆகிய படங்களில் நடிக்க இருக்கும் பிரியா பவானி சங்கர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 

இதனிடையே மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு SJசூர்யா - பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் பொம்மை. மொழி மற்றும் அபியும் நானும் உட்பட பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் ராதா மோகன் பொம்மை படத்தை எழுதி இயக்கியுள்ளார். மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு SJ.சூர்யா & பிரியா பவானி சங்கர் இருவரும்  மீண்டும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பொம்மை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், அண்தோனி படத்தொகுப்பு செய்துள்ள பொம்மை திரைப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர் கார்க்கி எழுதியுள்ளார். டாக்டர் V.மருது பாண்டியன், டாக்டர் ஜாஸ்மின் சந்தோஷ், மற்றும் டாக்டர் தீபா.T.துரை ஆகியோரது தயாரித்துள்ள பொம்மை திரைப்படத்தை ஏஞ்சல் ஸ்டுடியோ சார்பில் SJ.சூர்யா அவர்கள் வழங்குகிறார். SJ.சூர்யா நடிப்பில் நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த பொம்மை திரைப்படம் வரும் ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த நடிகை பிரியா பவானி சங்கர் தனது திரைப் பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பொம்மை படத்தில் நடித்திருக்கும் பிரியா பவானி சங்கரிடம், “உங்களுடைய ஃபேவரட் பொம்மை எது?” என கேட்டபோது, “நான் சிறுவயதில் அவ்வளவு பொம்மைகள் வைத்து விளையாடியது கிடையாது. எங்கள் பாட்டி எங்களோடு தான் இருந்தார்கள் அவரோடு இருக்கும் போது பல்லாங்குழி விளையாடுவேன். மற்றபடி நிறைய பொம்மைகள் எல்லாம் வைத்து விளையாடியது கிடையாது” என பதிலளித்தார். தொடர்ந்து அவரிடம், “பொதுவாக சொல்வார்களே கதாநாயகிகள் வீட்டில் பெரிய டெடி பியர் பொம்மையை கட்டிப்பிடித்து தான் தூங்குவார்கள் என்று அந்த மாதிரி ஏதாவது?” எனக் கேட்டபோது, “எனக்கு ஞாபகம் இருக்கிறது என்னுடைய 18 வயதில் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்த போது முதல் நாளே சொல்லிவிட்டேன், இந்த பொம்மைகள்… பொம்மைகளுக்கு சாப்பாடு ஊட்டி விடுவது… கூட வைத்து கொண்டு தூங்குவது.. அதெல்லாம் பிடிக்காது உன்னுடைய பாக்கெட் மணியை அதில் விரயம் செய்யாதே... நாம் எங்காவது போய் சாப்பிடலாம் என சொல்லிவிட்டேன். அதேபோல் தான் பூக்களுக்கும் சொல்லுவேன். அதை ஆசையாக வாங்கி வந்து ஒரு நாள் மாலைக்குள் காய்ந்து விடும் அதனால் அங்கெல்லாம் செலவு செய்யாதீர்கள்." என தெரிவித்திருக்கிறார். அந்த முழு வீடியோ இதோ…
 

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட புது சர்ப்ரைஸ்... ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அட்டகாசமான GLIMPSE இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட புது சர்ப்ரைஸ்... ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அட்டகாசமான GLIMPSE இதோ!

தனுஷ் பட இயக்குனர் - துல்கர் சல்மான் கூட்டணியில் இணைந்த ஜீவி பிரகாஷ்... பிறந்தநாள் பரிசாக வந்த செம அப்டேட் இதோ!
சினிமா

தனுஷ் பட இயக்குனர் - துல்கர் சல்மான் கூட்டணியில் இணைந்த ஜீவி பிரகாஷ்... பிறந்தநாள் பரிசாக வந்த செம அப்டேட் இதோ!

பிரபல வில்லன் நடிகர் கசான் கான் காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகம்!
சினிமா

பிரபல வில்லன் நடிகர் கசான் கான் காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகம்!