தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.கடின உழைப்பினால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலித்து பின் தவிர்க்க முடியாத ஸ்டாராக மாறி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். விரைவாக கமர்ஷியல் என்டர்டெயின் செய்ய கூடிய நடிகராக தற்போது சிவகார்த்திகேயன் வலம் வருகிறார். மேலும் தனகென்ற ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை தற்போது சிவகார்த்திகேயன் உருவாக்கி வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் முன்னதாக வெளியான ‘டாக்டர்’, ‘டான்’ ஆகிய திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்க திரையுலகம் சிவகார்த்திகேயன் பக்கம் எதிர்பார்ப்புடன் தற்போது திரும்பியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் மண்டேலா இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கி வரும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இன்று நேற்று நாளை இயக்குனருடன் ‘அயலான்’ படத்தில் நடித்து வருகிறார். அதனுடன் உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் அடுத்தாக உருவாகும் திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் வளர்ச்சி எவ்வளவு தூரம் உயர்ந்தாலும் அவர் தன் ரசிகர் மீதான அன்பும் அக்கறையும் பல இடங்களில் வெளிப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அதன்படி இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் இணை இயக்குனர் ஸ்ரீகௌதம் அவரின் வீட்டாரின் திருமணத்திற்கு சிவகார்த்திகேயன் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். இந்த நிகழ்வினை அட்டகாசமான வீடியோ தொகுப்பாக ஸ்ரீகௌதம் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த வீடியோ சிவகார்த்திகேயன் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

ஸ்ரீகௌதம் நெல்சன் திலீப் குமாரின் கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயான் - நெல்சன் நட்புறவு ரசிகர்களுக்கு தெரிந்தவையே இவர்களின் நட்பு வட்டாரத்தில் இருக்கும் ஸ்ரீ கௌதம் குடும்பத்தாரின் நிகழ்வில் தற்போது சிவகார்த்திகேயன் கலந்து கொண்டதை நெகிழ்ச்சியுடன் ஸ்ரீகௌதம் பகிர்ந்துள்ளார்.