திரையுலகில் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் சாம் சி எஸ். சாதாரணமான காட்சியை கூட தன் இசையின் மூலம் ரசிகர்களை கட்டி வைத்திருக்கும் திறன் கொண்டவர். குறிபாக இவரது பிஜிஎம் ஆரம்ப காலக் கட்டத்தில் இருந்தே சாம் சி எஸ் பின்னணி இசையில் கவனம் செலுத்தி அதன் மூலம் ரசிகர்களிடம் பரிச்சையமானர். உதாரணமாக 'விக்ரம் வேதா', 'கைதி' போன்ற படங்கள் இவரது திரைப்பயணத்தில் வைரக்கல். பெரிய ஹீரோ திரைப்படம் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை சாம் சி எஸ் க்கு வரிசை கட்டி படங்கள் தற்போது நிற்கிறது. ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் இவரை பாராட்டினாலும் மிகப்பெரிய அளவு கொண்டாடும் அளவு இன்னும் இல்லை என்ற கருத்து அதாவது underrated என்ற கோட்பாடு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
இதில் சாம் சி எஸ் அதிகம் சிக்கியவர். இந்த கருத்தில் அவருக்கும் நிறைய உடன்பாடு உள்ளது என்று பல இடங்களில் பேசி ஆதங்கபட்டிருப்பார்
இந்நிலையில் வரும் மார்ச் 10 ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படமான அகிலன் திரைப்படம் குறித்த சிறப்பு பேட்டி நமது கலாட்டா மீடியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் கல்யான் கிருஷ்ணன் கலந்து கொண்டு அகிலன் திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தனர். இதில் அகிலன் திரைப்படத்தில் பணியாற்றிய சாம் சி எஸ் குறித்து கேட்கையில்,
“அவர் 100 சதவீதம் Underrated தான். அதாவது அவரே வந்து அவரை குறைத்து எடை போட்டுபார். அவரால எல்லாமே முடியும். ஆனா அவர் என்ன சொல்லுவாருனா.. 'எனக்கு RR தான் முக்கியம்' னு சொல்லுவாரு.. அவர் நிச்சயமா படத்தை காப்பாத்திடுவாரு.. ஆனா ஹிட் பாடல்கள் னு பார்த்தா சில பாடல்கள் தான் அவருக்கு இருக்கும்..ஏனென்றால் அவர் RR மேல் கவனம் செலுத்துவார். கிட்டத்தட்ட இயக்குனர் போல எல்லா படத்துலையும் இறங்கி அந்த படத்தை காப்பாத்த என்னெல்லாம் பண்ண முடியுமோ அதை பண்ணுவார்.." என்றார்.
மேலும் பல அட்டகாசமான தகவல்களை ஜெயம் ரவி பகிர்ந்து கொண்ட வீடியோ இதோ..