தளபதி விஜயின் வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட மாஸ் மோதல் காட்சி! ரசிகர்களுக்கான சர்ப்ரைஸ் இதோ!

தளபதி விஜயின் வாரிசு படம் நீக்கப்பட்ட காட்சி,thalapathy vijay in varisu movie deleted scene out now | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சக்கரவர்த்தியாகவும் இந்தி சினிமாவில் பல கோடி ரசிகர்களின் அபிமான ஹீரோவாகவும் வலம் வருபவர் தளபதி விஜய். இதுவரை தனது திரைப் பயணத்திலேயே எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி விஜய் தனது 67-வது திரைப்படமாக தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இணைந்துள்ள லியோ பிளடி ஸ்வீட் திரைப்படத்தின் அதிரடியான அறிவிப்பு வீடியோ கடந்த பிப்ரவரி 3ம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்டு தொடரந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்சமயம் லியோ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்  பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் மற்றும் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் லியோ திரைப்படத்தில் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீசாகி பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக அனைத்து வயது ரசிகர்களும் கொண்டாடும் திரைப்படமாக ரசிக்கப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபல்லி இயக்கத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவராக வலம் வரும் விவேக், வாரிசு திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் கூடுதல் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். திரையில் கொண்டாடப்பட்ட வாரிசு திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட மாஸான மோதல் காட்சி ஒன்றை தற்போது அமேசான் பிரைம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அட்டகாசமான அந்த நீக்கப்பட்ட காட்சி இதோ…
 

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அசத்தலான பீரியட் படம்... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அசத்தலான பீரியட் படம்... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

வெற்றிமாறன் - விஜய் சேதுபதி - சூரியின் விடுதலை... ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த மிரட்டலான அறிவிப்பு இதோ!
சினிமா

வெற்றிமாறன் - விஜய் சேதுபதி - சூரியின் விடுதலை... ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த மிரட்டலான அறிவிப்பு இதோ!

லியோ படத்தில் தளபதி விஜய் உடன் மாஸ் சண்டை காட்சி... முதல் முதலாக ரகசியத்தை போட்டுடைத்த மிஷ்கின்!
சினிமா

லியோ படத்தில் தளபதி விஜய் உடன் மாஸ் சண்டை காட்சி... முதல் முதலாக ரகசியத்தை போட்டுடைத்த மிஷ்கின்!