தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அறிவழகன். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் அறிவழகன் கடந்த 2009ம் ஆண்டு இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வித்தியாசமான ஹாரர் திரில்லர் திரைப்படமாக அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி கதாநாயகனாக நடித்து வெளிவந்த ஈரம் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.
இதனை அடுத்து தனது இரண்டாவது திரைப்படமாக இயக்குனர் அறிவழகன் இயக்கிய வல்லினம் திரைப்படமும் பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. நடிகர் நகுல் நடிப்பில் கூடைப்பந்து விளையாட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக வெளிவந்த வல்லினம் திரைப்படத்திற்காக சாபு ஜோசப் சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான மெமரிஸ் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக அருள்நிதி கதாநாயகனாக நடித்த ஆறாது சினம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அடுத்து வெளிவந்த திரைப்படம் குற்றம் 23. நடிகர் அருண் விஜய் நடிப்பில் பக்கா கிரைம் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக வெளிவந்த குற்றம் 23 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி அடுத்ததாக தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸில் மீண்டும் இணைந்தது.
சோனிலைவ் தளத்தில் வெளிவந்த தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸும் ஹிட்டடித்தது. முன்னதாக அருண் விஜய் - அறிவழகன் கூட்டணியில் தயாரான அதிரடி ஆக்சன் ஸ்பை திரில்லர் திரைப்படமான பார்டர் திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில், வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஈரம் திரைப்படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குனர் அறிவழகன் - ஆதி - இசையமைப்பாளர் தமன் கூட்டணி தற்போது மீண்டும் புதிய ஹாரர் திரில்லர் படமாக தயாராகும் சப்தம் படத்தில் இணைந்துள்ளது.
7G பிலிம்ஸ் மற்றும் ஆல்பா ஃப்ரேம்ஸ் இணைந்து வழங்கும் சப்தம் திரைப்படத்தில் ஆதியுடன் இணைந்து நடிகை லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில், சாபுஜோசப் படத்தொகுப்பு செய்யும் சப்தம் திரைப்படத்திற்கு கவிஞர் விவேகா பாடல்களை எழுதுகிறார். மிரட்டலான ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகும் சப்தம் திரைப்படத்தின் மூணார் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் டாக்டர் & பீஸ்ட் ஆகிய திரைப்படங்களில் தனக்கே உரித்தான பாணியில் ரசிகர்களை மகிழ்வித்த நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி சப்தம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பு இதோ…
Happy to welcome the talented performer @KingsleyReddin on board for #Sabdham.
— 7G Films (@7GFilmsSiva) March 2, 2023
Starring @AadhiOfficial
An @dirarivazhagan Film
A @MusicThaman Musical
Produced by @7GFilmsSiva & @Aalpha_frames.#LakshmiMenon @Dop_arunbathu @EditorSabu @Manojkennyk @stunnerSAM2 @Viveka_Lyrics pic.twitter.com/Jm7ybGkBev