ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒருங்கிணைக்கும் மாபெரும் விழா.. அட்டகாசமான போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள் - வைரலாகும் அறிவிப்பு இதோ..

ரஜினி ரசிகர் நிகழ்ச்சி தலைப்பினை வெளியிட்ட திரைபிரபலங்கள் - Kollywood Celebrities launched superstar Rajinikanth fans grand event title | Galatta

இந்திய சினிமாவில் திரைப்பிரபலங்கள் ஒரு கட்டத்தில் உச்சம் பெற்றதும் அடுத்து இறங்கும் இடம் களத்தில் தான். ரசிகர்களின் உதவியினால் மக்கள் நலத் தொண்டுகளை செய்து மக்களிடம் புகழை பரவலாக்குவார்கள். எந்தவொரு மொழி நட்சத்திரங்களாக இருந்தாலும் அவர்களின் ரசிகர் கூட்டம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதன்படி தமிழ் சினிமாவின் அடையாளத்தை உலகறிய செய்த நடிகர் ரஜினிகாந்த். அட்டகாசமான நடிப்பின் மூலம் கருப்பு வெள்ளை காலத்தில் இருந்து 3D தொழில்நுட்ப திரைப்படம் வரை திரை ரசிகர்களை தொடர்ந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருபவர் ரஜினிகாந்த்.எந்த மொழி ரசிகர்களாக இருந்தாலும்  நடிகர்களாக இருந்தாலும் ரஜினிகாந்த் புகழ் பல மேடைகளில் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருக்கின்றது. உலகளவில் மிகப்பெரிய ரசிகர்களை கொண்ட நட்சத்திரங்களில் முக்கியமானவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது ரசிகர்கள் 80 காலக் கட்டங்களில் பல விதமாக பல பரிமாணங்களில் ரசிகர் மன்றங்கள் மூலமாக மக்கள் நலத் தொண்டுகளில் ஈடுபடுவது வழக்கம். நிறைய இடங்களில் சாதரணமாக உழைக்கும் மக்களுக்கு உதவும் நல்லுள்ளங்களாக ரஜினி ரசிகர்கள் இதுவரை இருந்து வருகின்றனர். உழைப்பாளி உணவகம் தொடங்கி ஆட்டோ நல சங்கம், இரத்த தான முகாம், அன்னதானம் மற்றும் பல என்று பல எளிமையான விளிம்பு நிலை ரசிகர்களிடமிருந்து பரவலான உதவிகள் செய்த வண்ணம் இருக்கின்றனர். இந்த செயல்பாடுகளுக்கு நன்றி தெரிவிக்கவும் மேலும் பல ஆலோசனை பெறவும் ரஜினிகாந்த் அவ்வப்போது திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடுவது வழக்கம். அரசியல் கட்சியாக மாறும் என்று பெருங்கனவு எதிர்பாராத சூழலில் நிறைவேறாமல் போக, தொடர்ந்து ரசிகர்களின் நலதொண்டு வழியிலே ரஜினிகாந்த் பெயர் ஒலிக்க பயணித்து வருகிறார்கள்

தொடர்ந்து மக்கள் பணியில் பரவி கிடக்கும் ரஜினி ரசிகர்கள் தற்போது ஒருபடி மேல் சென்று மக்கள் பணியை மக்களுக்கு மேலும் எடுத்து உரைக்கும் விதத்தில் மாபெரும் விழாவினை ஒருங்கிணைக்க திட்டமிட்டிருந்தனர். அந்த மாபெரும் நிகழ்வின் தலைப்பினை திரைப்பிரபலமும் ரஜினி ரசிகர்களுமான சிவகார்த்திகேயன் , இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகரும் இயக்குனருமான ராகாவ லாரன்ஸ் ஆகியோர் வெளியிட்டனர்.

தலைப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ், “ஒட்டுமொத்த தலைவர் கொண்டாடும் இந்த நிகழ்ச்சி மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. மனிதம் காத்து மகிழ்வோம் என்ற  தலைப்பு அவருக்கே உரித்தான தலைப்பு. இந்த நிகழ்ச்சியில் நானும் ஒரு ரசிகனாக கலந்து கொள்ள போவதில் மகிழ்ச்சியடைகிறேன்”  என்றார்.

Feeling Happy to release the Title for the Welfare assistance programme conducted by Superstar Rajinikanth fans..As a thalaivar fan, feeling proud to release this 🙏🏼💐#Superstar @rajinikanth#Manidham_Kaathu_Magizhvom@RIAZtheboss @SholinghurRavi pic.twitter.com/SdIMJyiEJU

— Raghava Lawrence (@offl_Lawrence) March 3, 2023

மேலும் கார்த்திக் சுப்புராஜ்,இந்த மாபெரும் நிகழ்ச்சியின் தலைப்பை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” என்று குறிப்பிட்டார்

Feeling Extremely Happy to release the Title #Manidham_Kaathu_Magizhvom
for the Welfare assistance programme conducted by Superstar Rajinikanth fans. As a Thalaivar fan, feeling proud to release this.#Superstar @rajinikanth@RIAZtheboss @SholinghurRavi pic.twitter.com/vvYQAtZaxN

— karthik subbaraj (@karthiksubbaraj) March 3, 2023

இசையமைப்பாளர் அனிருத், “இந்த அருமையான நிகழ்வின் தலைப்பை வெளியிடுவதில் ஒரு தலைவர் ரசிகராக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.” என்றார்.

Feeling Happy to release the Title for the Welfare assistance programme conducted by Superstar Rajinikanth fans.. As a thalaivar fan, feeling proud to release the title#Superstar @rajinikanth#Manidham_Kaathu_Magizhvom@RIAZtheboss @SholinghurRavi pic.twitter.com/FSuyudw1xb

— Anirudh Ravichander (@anirudhofficial) March 3, 2023

இறுதியாக நடிகர் சிவகார்த்திகேயன், “நல்ல மனிதனுக்கு அவருடைய ரசிகர்கள் கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியினை நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியின் தலைப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி. மேலும் ஒரு தலைவர் ரசிகனா இந்த தலைப்பை எழுதி வெளியிடுவதில் பெருமையா இருக்கு” என்றார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்கள் தொண்டாற்றும் விழாவின் தலைப்பினை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்..தலைவரின் ரசிகனாக இதை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்..#Superstar @rajinikanth#Manidham_Kaathu_Magizhvom@SholinghurRavi pic.twitter.com/R96MbDnaAw

— RIAZ K AHMED (@RIAZtheboss) March 3, 2023

அதன்படி மாபெரும் விழாவிற்கு ‘மனிதம் காத்து மகிழ்வோம்’ என்ற தலைப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மாபெரும் மக்கள் பணிக்கான ‘மனிதம் காத்து மகிழ்வோம் என்ற நிகழ்வு வரும் மார்ச் 26 ம் தேதி சென்னை YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. தமிழ் சினிமாவில் பெரும்பாலான நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் தான். சமீப காலத்தில் மிக முக்கியமான ரசிகர்களாக இருக்கும் திரைபிரபலங்களிடமிருந்து இந்த நிகழ்வின் தலைப்பு வெளியானது ரசிகர்கள் உற்சாகத்தில் வரவேற்று வருகின்றனர்.  

சினிமா

"மாவீரன் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் இப்படிதான்.." புகழ்ந்து தள்ளிய மிஷ்கின்.. ஆர்பரித்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ இதோ..

தனி ஒருவன் 2 எப்போது?.. இயக்குனர் மோகன் ராஜா கொடுத்த அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

தனி ஒருவன் 2 எப்போது?.. இயக்குனர் மோகன் ராஜா கொடுத்த அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ இதோ..

‘லியோ' படத்தில் நடிக்கிறேன்?.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடனான சந்திப்பின் காரணத்தை உடைத்த ஜெயம் ரவி – வைரல் வீடியோ இதோ..
சினிமா

‘லியோ' படத்தில் நடிக்கிறேன்?.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடனான சந்திப்பின் காரணத்தை உடைத்த ஜெயம் ரவி – வைரல் வீடியோ இதோ..