சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தில் இணைந்த சாயிஷா ஆர்யா.. சர்ப்ரைசை உடைத்த இயக்குனர் – விவரம் இதோ..

பத்து தல படத்தில் நடிக்கும் சாயிஷா ஆர்யா - Director Announced Sayyesha arya play cameo in Pathu thala | Galatta

சிலம்பரசன் TR நடிப்பில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘பத்து தல. கன்னட திரைப்படமான ‘மஃப்டி’  படத்தின் கருவை தழுவி உருவாக்க பட்ட திரைப்படம். இப்படத்தில் சிலம்பரசன் TR உடன் இணைந்து கௌதம் கார்த்திக், கலையரசன், டீஜே அருணாச்சலம் ஆகியோர் துப்பாக்கியில் மிரட்ட ஒருபுறம் பிரியா பவானி ஷங்கர், கௌதம் வாசுதேவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் ஓபெலி N கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக வரும் மார்ச் 18 ம் தேதி படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று பத்து தல படத்தின் டீசர் வெளியீடு பத்திரிக்கையாளர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருடன் நடிகர் கௌதம் கார்த்திக் கலந்து கொண்டனர். டீசர் வெளியீட்டுக்கு பின் படத்தின் இயக்குனர் படக்குழுவினருக்கு நன்றியினை தெரிவித்து வந்தார். மேலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் ஓபெலி N கிருஷ்ணன் அறிவிப்பின் படி, பிரபல நடிகையும் நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா  இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் அவர் ஒரு சிறப்பு பாடலிலும் நடிக்கிறார். என்று தெரிவித்தார். இந்த தகவல் ரசிகர்கள் பலரால் மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.  இதே நேரத்தில் பத்து தல டீசர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது.

நடிகை சாயிஷா ஆர்யா கடந்த 2017 ம் ஆண்டு வெளியான ‘வனமகன்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின் தொடர்ந்து முக்கிய நடிகர்களான சூர்யா, கார்த்தி, ஆர்யா போன்றோர்களின் படங்களில் நடித்து கவனம் பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடத்திலும் படங்கள் நடித்து வந்தார். இவர் கடந்த 2019 ல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் முடிந்து படங்களில் நடிக்காமல் இடைவெளி விட்டு இருந்த சாயிஷா  தற்போது சிம்புவின் பத்து தல படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. மேலும் இந்த செய்தி தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒருங்கிணைக்கும் மாபெரும் விழா.. அட்டகாசமான போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள் - வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒருங்கிணைக்கும் மாபெரும் விழா.. அட்டகாசமான போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள் - வைரலாகும் அறிவிப்பு இதோ..

இனி AGR ராஜ்ஜியம்.. ‘பத்து தல’ படத்தின் மிரட்டலான டீசர் வெளியானது.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வீடியோ வைரல்..
சினிமா

இனி AGR ராஜ்ஜியம்.. ‘பத்து தல’ படத்தின் மிரட்டலான டீசர் வெளியானது.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வீடியோ வைரல்..

சினிமா

"இதனால்தான் ‘அகிலன்’ படம் வெளியாக Late ஆச்சு".. சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஜெயம் ரவி - முழு வீடியோ இதோ..