ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பூவே பூச்சூடவா.டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்று பூவே பூச்சூடவா தொடரின் ஹீரோயினாக உருவெடுத்வர் ரேஷ்மா.சீரியலிலும் தனது நடிப்பால் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மதன் பாண்டியனை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தொடரின் நாயகி ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டு அன்று தெரிவித்திருந்தார்.இந்த தொடர் 1000 எபிசோடுகளை கடந்து பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.இந்த தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது.

அடுத்தாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் தொடரில் ரேஷ்மா ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த தொடரில் நாயகனாக ரேஷ்மாவை திருமணம் செய்துகொள்ள இருக்கும் மதன் நடிக்கிறார்.படவா கோபி,சோனா,ரேஷ்மா,சுஜுவாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த தொடரில் தற்போது குக் வித் கோமாளி மூலம் பிரபலமான தீபா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

View this post on Instagram

A post shared by Tamil TV News (@tamiltvnews)