புலியிடம் தனி ஆளாக சிக்கிக் கொண்ட நபர், சாமார்த்தியமாகச் செயல்பட்டு உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் நெஞ்சை பதற வைத்துள்ளது.

மும்பை அருகே உள்ள பாந்தரா மாவட்டத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில், கடந்த சனிக்கிழமை அன்று, விவசாயி ஒருவர் தனி ஆளாக நின்று வேலை செய்துகொண்டிருந்தார்.

அப்போது, அங்கு எதிர்பாராமல் வந்த புலி ஒன்று, அவரை சுற்றி வளைத்து, அவரை தாக்க முற்பட்டது. இதனால், பதறிப்போன அவர், பின்னர் சாமார்த்தியமாகச் செயல்பட்டு, அப்படியே அங்கேயே மூச்சை அடக்கிக்கொண்டு, அசைவின்றி படுத்துக்கொண்டார்.

இதனால், அந்த புலி அவரின் பக்கத்தில் வந்து அமர்ந்து. அவரை தாக்குதவற்கு சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தது.

இதனிடையே, புலி வயல்வேலிக்குள் வந்து, விவசாயி ஒருவரைத் தாக்க முற்பட்டதைத் தூரத்திலிருந்து சிலர் பார்த்ததால், இந்த செய்தி அருகில் உள்ள கிராமம் முழுவதும் காட்டுத் தீ போல் வேகமாகப் பரவியது. இதனையடுத்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சத்தம் போட்டனர்.

You want to see how does a narrow escape looks like in case of encounter with a #tiger. #Tiger was cornered by the crowd. But fortunately end was fine for both man and tiger. Sent by a senior. pic.twitter.com/1rLZyZJs3i

— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 25, 2020

இதனையடுத்து, மக்கள் அதிக அளவில் கூடு நிற்பதையும், அவர்கள் எழுப்பிய சத்தத்தாலும் மிரண்டு, பயந்துபோன புலி, அந்த பகுதியில் உள்ள சாலையைக் கடந்து, வனப்பகுதிக்குள் ஓடியது.

புலி ஓடிய நிமிடத்தில், பேச்சு மூச்சு இல்லாமல் படுத்திருந்த விவசாயி, அடுத்த நிமிடமே இயல்பாக எழுந்து நடந்து சென்றார்.

இதனை, அங்கு நின்றவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.