2019 ஆம் ஆண்டில் தேசத் துரோக வழக்கில் மொத்தம் 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி கூறி உள்ளார்.

இந்தியாவில் தேசத் துரோக வழக்கில் எடுக்கப்படும் சட்டப்படியான நடவடிக்கைகள் குறித்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் இந்த கேள்விகள் கேட்கப்பட்டதும், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்து, இதற்கு எழுத்து மூலமாகப் பதில் அளித்தார்.

அதில், கடந்த 2019 ஆம் ஆண்டில் தேசத் துரோக வழக்கு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமாகக் கூறியிருந்தார்.

அதன் படி, “கடந்த 2019 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் தேசத் துரோக சட்டப் பிரிவின் கீழ் 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்றும், இது சம்மதமாக மொத்தம் 96 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அத்துடன், “கைது செய்யப்பட்டவர்களில் 76 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் 29 பேர் விடுதலை செய்யப்பட்டனர்” என்றும், அவர் கூறியிருந்தார்.

மேலும், “2019 ஆம் ஆண்டில், அதிக தேசத் துரோக வழக்குகளைச் சந்தித்த மாநிலமாக கர்நாடகா மாநிலம் அறியப்படுகிறது என்றும், அங்கு மட்டும் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்” என்றும், அவர் தெரிவித்தார்.

“அதற்கு அடுத்தபடியாக, அசாம் மாநிலத்தில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 23 பேர் கைது செய்யப்பட்டனர்” என்றும், அவர் கூறியுள்ளார். அதைப்போல், “காஷ்மீரில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அங்கு மட்டும் 16 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும். உத்தரப் பிரதேசத்தில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அங்கு 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, “தேசத் துரோக சட்டத்தை வலுவாக்குவதற்காக ஏதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்ற கேள்விக்குப் பதிலளித்த கிஷண் ரெட்டி, “சட்ட திருத்தங்கள், வழக்கமான நடைமுறைகளைத் தான்” அவர் தெரிவித்தார்.

அதே போல், “ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று, மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவிட்டாக கூறினார்.

இந்திய எல்லையான லடாக் எல்லை நிலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

அப்போது, “சீன எல்லையில் இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து உள்ளார்கள் என்றும், ஒரு அங்குலம் நிலத்தைக் கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்றும், ராஜ்நாத் சிங் உறுதிப்படத் தெரிவித்தார்.

“இரு நாட்டு எல்லை பிரச்சினைகள் தொடர்பாக, நடந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும், எல்லையில் பதற்றத்தைத் தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இரு தரப்பு உறவுகளைப் பேணுவதில் இந்தியா எப்போதும் வலியுறுத்தி உள்ளது” என்றும், ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.